Saturday, December 7, 2013

இலங்கையில் இவ்வாண்டில் மட்டும் 500 பேர் சுட்டுக்கொலை- யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி!

இலங்கையில் 2013ஆம் ஆண்டு மட்டும் துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தால் 500 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி தெரிவித்தார்.

இதன்படி கடந்த 2012ஆம் ஆண்டு 700 பேரும், 2013ஆம் ஆண்டு 500 பேரும் கொலை துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்ததுடன் முப்படைகளைத் தவிர்ந்த சட்டவிரோதமாக ஏனையவர்களிடம் இருக்கும் துப்பாக்கிகளைக் களைவதற்கு இம்மாதம் 15ஆம் திகதி வரை காலக்கேடு வழங்கப்பட்டுள்ளது எனக்குறிப்பிட்டார்.

எனவே மேற் குறித்த காலத்துக்குள் துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் தகுந்த அதிகாரிகளிடம் துப்பாக்கிகளைக் கையளிக்க வேண்டுமென்றும், அவ்வாறு துப்பாக்கிகள் கையளிக்காதவர்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் இதன் போது தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com