"இலங்கைப் பெண்களை டொலர் 50க்கு" என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தமை பெண்களை இழிவுபடுத்தும் செயலாகும் !!
யாரும் எதையும் விமர்சிக்கலாம் ஆனால் விமர்சனம் சரி யாக இருக்க வேண்டும். அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டும். ஆனால் பிழையான தரவுகளை வழங்கி விமர்சனம் செய்யக் கூடாது. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இல ங்கைப் பெண்கள் தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இலங்கைப் பெண்களை டொலர் 50க்கு என்று பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறுயது பெண்களை இழிவுபடுத்தும் செயலாகும் என அமைச்சர் டிலான் பெரேரா சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மகளிர் விவகார மற்றும் சிறுவர் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நலனோம்புகை அமைச்சின் குழு நிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் டிலான் பெரேரா இதனைத் தெரிவித்தார்.
சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாறறுகையில், பணிப்பெண்களாக எமது பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது குறைக்கப்பட் டுள்ளதோடு அவர்களுக்குத் தகுந்த கௌரவமும் இந்த அரசாங்கத்தால்தான் வழங்கப்பட்டுள்ளது.
அரசியலுக்கு ஏன் 32 வீதம் பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதற்கு அப்பால் சென்று 52 வீதம் இருக்க வேண்டுமென்பதே எனது கருத்தாகும். இதனை தேசிய பட்டியல் ஊடாக வழங்கினால் நல்லது. இங்கிலாந்து கிரிக்கெட் சபை யொன்றுக்கு 100 வருடங்களுக்குப் பின்னர் தான் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. பணிப்பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் தற்போது மாற்றம் கண்டுள்ளது.
ஐ.தே.கட்சி ஆட்சிக்காலத்தில் 80 வீதம் பெண்கள் வெளிநாடு சென்றனர். ஆனால் இந்த அமைச்சைப் பொறுப்பேற்ற பின்னர் பெண்கள் செல்வது குறைக்கப்பட்டு ஆண்கள் செல்வது அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
உண்மையில் கருத்துச் சுதந்திரம் என நினைத்துக்கொண்டு தவறான கருத்தாக இருந்தாலும். நான் தெரிவித்துவிட்டேன் என்பதற்காக முக்கியத்துவம் கொடுக்கவும் முடியாது அதற்காக உரிமை கொண்டாடவும் முடியாது. ஏனெனில் அது பல தவ றான வழிமுறைக்கு இட்டுச் செல்லும். எனவே விமர்சனங்களை முன்வைப்போர் இவற்றை சிந்தித்து தமது விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
0 comments :
Post a Comment