40 ஆண்டுகளாக பெற்ற மகனை கூண்டுக்குள் அடைத்து வைத்த தாய்!!
சீனாவை சேர்ந்த தாய் ஒருவர் தனது மகனை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அடைத்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் மத்திய ஹெனான் பகுதியில் உள்ள ஷென்சோ பகுதியைச் சேர்ந்தவர் பென்ங் வீகிங்(48). மனவளர்ச்சி குன்றிய பென்ங் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை கூண்டிற்குள்ளேயே கழித்துள்ளார்.
இதற்குக் காரணம் இவரது பெற்றோர் தான் இவரது தந்தை தற்போது உயிரோடு இல்லை. 80 வயது மதிக்கத்தக்க தாய் தான் இவரை கவனித்து வருகிறார். தனது மகனின் பாதுகாப்பிற்காகவே அவனை கூண்டில் அடைத்து வைத்து வளர்த்தோம் எனத் தெரிவித்துள்ளார் அவனது தாயார்.
மேலும் கூறுகையில் அவனுக்கு 6 வயதாக இருந்த போது ஏற்பட்ட தீவிர காய்ச்சலின் விளைவாக அவனது மூளை பாதிப்படைந்தது, அதனைத் தொடர்ந்து அவனது மனநிலைப் பாதிக்கப்பட்டது.வீகிங்கைப் பாதுகாப்பதற்காகவே அவனுக்கு இப்படி ஒரு கூண்டினை வடிவமைத்தார் அவனது தந்தை. காரணம், அவன் சுதந்திரமாக வெளியில் உலாவியபோது கத்தி போன்றப் பொருட்களால் தன்னைத் தானே தாக்கத் தொடங்கினான்.
பல சமயங்களில் நடக்கத் தெரியாமல் கீழே விழுந்ததில் அவனது முகத்தில் காயம் ஏற்பட்டது. எனவே, இது போன்ற அசம்பாவிதங்களில் இருந்து அவனைக் காப்பதற்காகவே, இத்தகைய இரும்புக் கூண்டு ஒன்றை வடிவமைத்தார் என்று தெரிவித்துள்ளார்.வயதான தனக்குப் பிறகு தனது மகனைப் பார்த்துக் கொள்வதற்கு வேறு சரியான ஆளை தேடிய போது தான் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
0 comments :
Post a Comment