போதைப் பொருள் கடத்துநர்களுக்கு உதவி செய்யும் 4 பேர் அரசியலாள ர்கள்! போதைப் பொருள் ஒருபோதும் உடலுறவில் இன்பம் தராது!
“இந்நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் போதை வஸ்துப் பாவனையாளர்களிடமிருந்து நாட்டைக் கட்டிக் காப்பதற்கு பொதுபல சேனாவினர் பாரிய பங்களிப்புச் செய் கின்றனர். அதாவது, பொதுமக்களுக்கு அதுபற்றி எடுத்துச் சொல்லி, அதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களு க்கு இதுபற்றி மிகவும் துல்லியமாக எடுத்தோதி வருகின் றோம்” என பொதுபல சேனா குறிப்பிடுகிறது.
பொதுபல சேனாவினர் இந்த தேசிய பொறுப்பினை செயற்படுத்துவதற்கு முதன் முதலில் கொலன்னாவையைத் தெரிவு செய்துள்ளதுள்ளமையும், அங்கிருந்து முதலில் போதைப் பொருளை முழுமையாக அழித்தொழிக்க ஆவன செய்யவுள்ளது என்பதுவும் ஊடகங்களில் ஏற்கனவே பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானஸார தேரருடன் போதைப் பொருள் தொடர்பில் காணப்பட்ட நேர்காணலொன்றிலிருந்து தொகுக்கப் பட்ட சில விடயங்கள் லக்பிமவில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அந்நேர்காணலின் சுருக்கம் நம் வாசகர்களுக்காக…
போதைப் பொருளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கக்கூடிய முன்னணி வகிக்கும் அரசியலாளர்கள் நால்வர் இருக்கின்றனர். அவர்கள் 4 பேர் பற்றி தகவல்களும் எங்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. இவர்கள் 4 பேரும் போதைப் பொருள் கடத்தக்கூடியவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிகின்றவர்கள். அதுமட்டுமல்ல, பொலிஸாரிடம் அகப்படுமிடத்து காப்பாற்றுவதற்கும் தங்களது பங்களிப்பை நல்குகின்றார்கள் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானஸாரர் நேர்காணலின் போது முதலில் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னணி வகிக்கக்கூடிய போதைப் பொருள் கடத்துநர்கள் 30 பேருக்கும் மேற்பட்டவர்கள் இந்நாட்டில் இருக்கின்றார்கள் என்பதை நாங்கள் கண்டுபிடித்திருக்கின்றோம். பெரும்பாலும் போதைப்பொருட்கள் இண்டர்கூலர், ப்ராடோ போன்ற அதிசொகுசு வாகனங்களின் மூலமாகவே கடத்தப்படுகின்றன என்பதும் தெளிவாகியுள்ளன எனவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கலகொட அத்தே ஞானஸார தேரர் மேலும் கருத்துரைக்கும்போது,
இனிமேலும் அவ்வாறு அந்த போதைவஸ்துக் கடத்துநர்களுக்கு உதவி ஒத்தாசை செய்யாதிருங்கள் என்று பகிரங்கமாக நாங்கள் அந்த நால்வருக்கும் அறிவித்தல் கொடுத்திருக்கின்றோம். போதைப் பொருள் கடத்துநர்களுக்கு உதவி செய்த நால்வரும், போதைப் பொருள் கடத்துநர்களும் போதியளவு பணம் தேடியிருக்கிறார்கள். தேசத்தின் பேரால் இனியும் அவ்வாறு செய்ய வேண்டாம் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். பழையவற்றை மீண்டும் நினைவுபடுத்தாமல் அவற்றை மறந்து, சிறந்த மனிதர்களாக மாறுங்கள் என நாங்கள் தேவைப்பாட்டோடு அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறு அவர்கள் செயற்படாதவிடத்து, இந்நாட்டு மக்கள் பாரிய சக்தியாக மாறி போதைப் பொருள் பாவனைக்கெதிராக கிளர்ந்தெழுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
பொதுபல சேனாவாக நின்று நாங்கள், கிராமங்கள் தோறும் போதைப் பொருளுக்கு எதிராக சங்கங்களை உருவாக்கி, நற்போதனைகள் புரிந்து, பிரச்சாரங்கள் செய்கின்ற வேலைத் திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.
சர்வதேசத்திற்குள் சிக்குண்டு கொண்டதால் இலங்கையிலும் போதைப் பொருள் தலைதூக்கியுள்ளது. இது சர்வதேச பயங்கரவாததின் ஒரு பகுதியே. இலங்கை நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கூறும் பௌத்த நாடு. எங்கள் நாட்டிலிருந்து முழுமையாக போதைப் பொருள் பாவனையை இல்லாதொழிக்க வேண்டும். இல்லாதவிடத்து, இந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் குறுகிய காலத்திலேயே நோயுடன் கூடிய மரணத்தைச் சந்திப்பர். போதைப் பொருள் உபயோகிப்பதன் மூலம் உடலுறவில் அதிகூடிய இன்பத்தைக் காணலாம் என்ற மிகப் பொய்யான வதந்தி பரவிக் கொண்டிருக்கின்றது. போதைப் பொருளுக்கு அடிமையானால் பாலியல் சக்தி யே போலியாகின்றது. அது விஞ்ஞான ரீதியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தெளிவான உண்மை.
போதைப் பொருளினால் பாதிக்கப்பட்டவர்களை சீர்செய்வதற்காக – புனருத்தாபனம் செய்வதற்காக நாங்கள் பௌத்த சகாய நிதியம் ஒன்றை கட்டியெழுப்பவுள்ளோம். பௌத்த சிந்தனையுடன் கூடிய அந்நிறுவனத்தின் மூலம் அவர்கள் கண்காணிக்கப்படுமிடத்து மீண்டும் அத்தீய செயலில் ஈடுபட மாட்டார்கள். கூடுதலான இளைஞர்களே அதனால் பாதிப்படைந்திருக்கிறார்கள். சொற்ப அளவு யுவதிகளையும் அது தன்பால் ஈர்த்துக் கொண்டுள்ளது. இந்நாட்டு இளைஞர் யுவதிகளை பாதுகாக்கும் பாரிய சிந்தனையுடனேயே போதைப் பொருள் பாவனைக்கெதிராக பொதுபல சேனாவ எழுந்திருக்கின்றது எனவும் ஞானஸாரர் நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.
போதைப் பொருள் பாவனைக்கெதிராக தங்கள் அமைந்து எழுந்துகொண்டபோது பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்துள்ளதாக என ஞானஸாரரிடம் வினவியதற்கு,
“இன்னும் அவ்வாறான எச்சரிக்கைகளை நாங்கள் சந்திக்கவில்லை. என்றாலும் “தாங்கள் அச்சுறுத்தல்களையும், பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும்” எனச் சிலர் சொல்கிறார்கள். என்றாலும், நாங்கள் ஒருபோதும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி முன்வைத்த காலை பின்னோக்கி இழுக்க மாட்டோம். உயிரைக் கொடுத்தாவது போதைவஸ்துப் பாவனையை இந்நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிப்பதற்கு ஆவன செய்வோம்” என விடை பகர்ந்திருக்கிறார் கலகொடஅத்தே ஞானஸார தேரர்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment