எச்.ஐ.வி. பீடிப்பால் இலங்கையில் 307 பேர் உயிரிழப்பு-பிரதி சுகாதார அமைச்சர்
இலங்கையில் இதுவரை 307 பேர் எச்.ஐ.வி. நோயினால் இறந்துள்ளதோடு எச்.ஐ.வி. நோயினால் பீடிக்கப்பட்ட 1649 அடையாளங் காணப்பட்டிருப்பதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாய்மூல கேள்வி நேரத்தில் பீ. ஹெரிசன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் 2010ஆம் ஆண்டில் 121 எச்.ஐ.வி. நோயாளர்களும் 2011ஆம் ஆண்டில் 146 பேரும் 2012ஆம் ஆண்டில் 186 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களில் அதிகமானவர்கள் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கண்டி, களுத்துறை, காலி, புத்தளம் மாவட்டங்களிலேயே அடையாளங் காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எயிட்ஸ் நோய் பரவுவது குறைவாகவே உள்ளதுடன் பாடசாலை மட்டத்தில் உள்ளவர்கள் முதல் அனைவருக்கும் எயிட்ஸ் குறித்து அறிவூட்டப்படுகிறது என பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க தெரிவித்தார்.
0 comments :
Post a Comment