30 வருடங்களுக்கு பிறகு கலவரம்: சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் பரபரப்பு!
சிங்கப்பூரில் இந்தியர் ஒருவரின் மரணம் தொடர்பில் சர்ச்சை எழுந்ததால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பாகியுள்ளதுடன் சுமார் 27 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டிருப்பதுடன், ஐந்து காவல்துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் சில பொதுமக்கள் வாகனங்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
33 வயதான வெளிநாட்டு பணியாளர் (இந்தியர்) ஒருவர் சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் வைத்து தனியார் பேருந்து ஒன்றினால் மோதி மரணமடைந்ததே இந்த ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டதற்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 30 வருடத்திற்கு பிறகு சிங்கப்பூரில் முதன்முறையாக பொதுமக்கள் ஆர்ப்பாடம் ஒன்று இவ்வாறு கலவரமாக மாறியுள்ளதை சகித்துக் கொள்ள முடியாது என சிங்கப்பூர் போலிஸ் கமிஷனர் என்.ஜி. ஜூ ஹீ தெரிவித்துளார்.
இதே வேளை லிட்டில் இந்தியா பகுதி தென்னிந்தியர்கள் மற்றும் தெற்காசியவர்கள் அதிகம் பணிபுரியும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
1 comments :
சீமான் , ராமதாஸ் , வைகோ, நெடுமாறன் , திருட்டு மாழவன், போன்றோர் ஊட்டும் வன்முறை கலாசாரம் தான் நாம் இங்கே பார்ப்பது, இந்த தமிழ் நாட்டு காட்டு மிராண்டிகளுக்கு கூட்டம் சேர்ந்தால் தான் வீரம் வரும், தனியே என்றால் ஓடி ஒழித்து விடுவார்கள், கூட்டம் சேர்ந்து தான் கட்பழிப்புகளிலும் ஈடு படும் நவ நாகரிக உலகிற்கு ஏற்பில்லாத காட்டு மிராண்டுகள்.
நான் பல முறை சிங்கபூர் சென்ற போது பார்த்துள்ளேன் , தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் அங்குள்ள ஐரோப்பிய நாடுகளை ஒத்த வீதி ஒழுங்கு முறைகளை மதிக்காது , தம் போக்கில் வீதிகளை கடப்பதையும் , அதனால் விபத்துக்கள் ஏற்படுவதையும், ஞாயிறு கிழமைகளில் விடுமுறை தினம் என்பதால் அவர்கள் மிகவும் குடி போதையில் உலா வருவார்கள், அவர்களுக்கிடையில் சண்டைகளும் ஏற்படுவதுண்டு.
இலங்கை அரசுக்கு கிடைத்துள்ள மிக பெறுமதியான துரும்பு சீட்டு , இதை உகந்த முறையில் பயன் படுத்துவது அவர்களில் ராஜா தந்திர புத்தி கூர்மையில் உள்ளது, அதை விட பொருளாதார ரீதியில் பயன் படுத்த முடிவதுடன் இலங்கையுடன் விரோத மன பான்மையுடன் நடக்கும் தமிழ் நாட்டை தனிமை படுத்த முடியும், சிங்கபூர் அரசுடன் பேசி நாகரிகம் உள்ள இலங்கையர்களை வேலை வாய்ப்புகளுக்கு அனுப்ப முடியும் ( அரபு நாடுகளில் அடிமை தனமாக வேலை செய்வதையும் தவிர்க்க முடியும் ) .
உலகம் முழுதும் பொருளாதார மென் பட்ட வாழ்கை நோக்கி சென்ற தமிழர்களில் மிகவும் பண்பாடான படித்த , நல்ல கலாசாரத்துடன் , வன்முறையற்ற , நாகரிக வாழ்கை வாழும் தமிழர்கள் என்றால் சிங்கபூரியன் தமிழர்களை தான் குறிப்பிட முடியும் , அப்படி பட்டவர்களின் வாழ்க்கையில் மண் போட்ட இந்த காடு மிரண்டிகளை அந்த அரசு மிக மிக கடுமையாக தண்டிக்க வேண்டும்.
இன்று மொரிசியஸ் போன்று புலிகளுக்கு வாழ் பிடிக்க வெளிக்கிட்டிருக்கும் அரசுகளுக்கு இது போன்ற விடையங்களை எடுத்து காட்டி எச்சரிக்கை செய்ய வேண்டியது இலங்கை அரசின் கடமை.
Post a Comment