Sunday, December 29, 2013

ஒஸ்கார் விருதுக்கு இவ்வருடம் 289 படங்கள் தகுதி

இவ்வருடம் வெளியான திரைப்படங்களின் சிறந்த படத்துக்கான ஒஸ்கார் விருதுக்கு பரிசீலிக்பப்டுவதற்கு 289 படங்கள் தகுதி பெற்றுள்ளதாக ஒஸ்கார் விருதுகளை வழங்கும் அக்கடமி ஒப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயன்ஸ (AMPAS) அமைப்பு தெரிவித்துள்ளது.


கடந்த 5 வருடகாலத்தில் இவ்விருதுக்கான பரசீலனைக்கு தகுதி பெற்ற படங்களின் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும் என தெரிவித்துள்ள இந்த அமைப்பு அதற்கான புள்ளி விபரங்களையும் வெளியிட்டுள்ளது இதன் படி 2008 ஆம் ஆண்டு 281 படங்களும் 2010 ஆம் ஆண்டு 248 படங்களும் கடந்த வருடம் 282 படங்களும் தகுதி பெற்றிருந்தது எனக்குறிபிட்டுள்ளது.


மேலும் சிறந்த படத்துக்கான ஒஸ்கார் விருதுக்கான பரிசீலனைக்கு ஒருபடம் தகுதி வேண்டுமானால் அதற்கு சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் அதாவது விருதுக்கு கருத்திற்கொள்ளப்படும் படம் குறித்த வருடத்தில் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பிராந்தியத்தில் திரையிடப்பட்டு குறைந்தபட்சம் 7 நாட்கள் ஓடியிருக்க வேண்டும்.

இதனை விட அந்தப்படம் 40 நிமிடங்களுக்கு மேற்பட்ட நேரம் ஓடும் படமாக இருக்க வேண்டும் என்பதுடன் 35 அல்லது 70 மி.மி. பிலிம் படமாக அல்லது டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்பட்ட படமாக இருக்க வேண்டும் ஆகியன முக்கிய நிபந்தனைகளாகும். 

இவ்வருடம் தகுதி பெற்ற 289 படங்களிலிருந்து ஒஸ்கார் விருதுக்கு சிபாரிசு செய்யப்படும் படங்களின் பட்டியல் ஜனவரி 16 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்பதுடன் ஒஸ்கார் விருதுவிழா 2014 மார்ச் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

இதே வேளை இந்த அமைப்பு தங்க நிறத்திலான முக்கோணப் பின்னணியில் பிரபல ஒஸ்கார் சிலை காணப்படும் வகையில் புதிய இலச்சினையை இவ்வருடம் அறிமுகம் செய்கிறது இதற்கு முன்னர் தங்க நிறத்தில் ஓவல் வடிவப் பின்னணியில் ஒஸ்கார் சிலையைக் கொண்டதாக இந்த இலச்சினை இருந்தது.

No comments:

Post a Comment