தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா சமீபத் தில் தனது 95வது வயதில் மரணம் அடைந்தார். கறுப்பர் இன மக்களின் விடுதலைக்காக போராடிய அவரை மைனாரிட்டியாக வாழும் வெள்ளையர் இன அரசு கைது செய்தது.பின்னர் அவர் 27 ஆண்டுகள் தனிமை சிறையில் அடைக் கப்பட்டார். அதில் 18 ஆண்டுகள் ரூபன் தீவில் உள்ள சிறையில் இருந்தார். அவர் மரணம் அடைந்த நிலையில் ரூபன் தீவில் 18 ஆண்டுகள் அவரை அடைத்து வைத்திருந்த ஜெயில் தற்போது சுற்றுலா தலமாக மாறி தென் ஆப்பிரிக்க அரசுக்கு வருமானத்தை குவித்து வருகிறது.
தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் வெளி நாட்டினர் முதலில் கேப் டவுன் போன்ற இடங்களுக்கு செல்வதில்லை. மாறாக மிகச்சிறிய நகரமான ரூபன் தீவுக்குதான் படையெடுக்கின்றனர்.அங்குள்ள சிறைக்கு சென்று மண்டேலா அடைக் கப்பட்டிருந்த மிகச்சிறிய அறையை மரியாதை கலந்த ஆர்வத்துடன் பார்க்கின்றனர். அந்த அறையில் மண்டேலா படுக்கையாக பயன்படுத்திய ஒரு போர்வை, மேஜை, தண்ணீர் குடித்த டம்ளர், குப்பை கூடை போன்றவை நினைவு சின்னங்களாக உள்ளன.
மண்டேலா விடுதலை ஆகி 22 ஆண்டுகளாகியும் இன்னும் அவை நினைவு சின்னங்களாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment