தமிழ் பொலிஸ் சிப்பாய்கள் 240 பேர் பொலிஸ் சேவையில் நேந்று இணைத்துக்கொள்ளப்பட்டனர்!
பயிற்சி வழங்கப்பட்ட ஆயுதம் ஏந்திய தமிழ் பொலிஸ் சிப்பாய்கள் 240 பேர் நேற்று பொலிஸ் சேவையில் இணை த்துக்கொள்ளப்பட்டனர். அவர்களுடன் மொத்தமாக 473 ஆயுதம் ஏந்திய பொலிஸ் அதிகாரிகள் தமது முதற்கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இவர்களுக்கான பிரியாவிடை வைபவம் இன் றைய தினம் பொலிஸ்மா அதிபர் என்.கே இளங்ககோன் தலைமையில் இடம் பெறவுள்ளது. இதேவேளை இவ்வாறு முதற்கட்ட பயிற்சிகளை நிறைவு செய்த வர்களில், ஆயுதம் ஏந்திய பொலிஸ் சிப்பாய் சாரதிகள் 233 பேரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அந்தவகையில் இவ்வாறு பயிற்சி வழங்கப்பட்ட தமிழ் பொலிஸார் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களில் சேவையில் ஈடுபடுவார்களென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment