Wednesday, December 25, 2013

23 வருடங்களின் பின் கொழும்பிலிருந்து பளை வரையான ரயில்சேவை அடுத்த மாதம் ஆரம்பம்!

23 வருடங்களின் பின்னர் கொழும்பிலிருந்து பளைக்கான புகையிரத சேவை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. தற்போது யாழ்தேவி புகையிரத சேவை, கிளிநொச்சி வரை இடம்பெறுகிறது. கிளிநொச்சியிலிருந்து பளை வரையான புகையிரதப்பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தற்போது சமிக்ஞை விளக்குகளை பொருத்தும் பணிகள் இடம்பெறு வதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

யுத்தத்தினால் வடபகுதிக்கான ரயில்பாதை முழுமையாக அழிவடைந்தது. எனினும் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், முதற்கட்டமாக வவுனியாவிலிருந்து ஓமந்தை வரையான ரயில்பாதை நிர்மாணிக்கப்பட்டு, ரயில்சேவை ஆரம்பிக்கப் பட்டது.

பின்னர் ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான 63 கிலோ மீற்றர் தூரம் கொண்ட ரயில்பாதை நிர்மாணிக்கப்பட்டு, கடந்த செப்டெம்பர் மாதம் ஜனாதிபதியி னால் ரயில்சேவை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது கிளிநொச்சியிலிருந்து 40 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பளை வரையான பகுதி வரை ரயில்பாதை நிர்மாணிக் கப்பட்டுள்ளது.

இதேவேளை 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடிய விதத்தில் வடக்கிற் காக ரயில்பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment