மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் கொலையுடன் தொடர்புடையவர் களுக்கு ஜனவரி 22வரை விளக்க மறியல்!
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் கொல்லப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (10) விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேக நபர் களை எதிர்வரும் ஜனவரி 22ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைக்கு நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் அழைக்கப்பட வேண்டும் என அரச பிரதி சொலிஸ்டர் ஜெனரல் கேட்டுக் கொண்டார். அதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம் அடுத்த விசாரணை மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்நாயக்க முன்னிலையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.
2007 ஒக்டோபர் மாதம் 6ம் திகதி வடமத்திய மாகாண முன்னாள் எதிர்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் கட்சி அலுவலகத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் கொல்லப்பட்டனர்..
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் எட்டுப்பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏனைய இரு சந்தேகநபர்களும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட கடந்த மூன்று வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment