Wednesday, December 11, 2013

22 பரிந்துரைகளில் 12 பரிந்துரைகள் வெற்றிகரமாக தீர்த்து வைப்பு!

மோதல்களால் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்டவர்ளின் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக LLRC முன்வைத்த 22 பரிந்துரைகளில் 12 வெற்றிகரமாக தீர்த்துவைக்கப்பட்டிருப்பதாகவும் மிகுதி 10 சிபாரிசுகளும் 2014 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படு மென காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் நேற்று உறுதியளித்தார்

தகவல் திணைக்களத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தி யாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார்.

வடக்கு, கிழக்கிலிருந்து மோதல்களால் இடம்பெயர்ந்த சுமார் 8 இலட்சத்து 40 ஆயிரத்து 438 பேருள் தமது காணி தொடர்பிலான சிக்கல்களைக் கொண்டிருந்த 488 பேரின் பிரச்சினைகள் முழுமையாக தீர்த்து வைக்கப்பட்டிருப்பதாக கூறிய அமைச்சர், எஞ்சிய ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 950 பேரினதும் காணிப் பிரச்சினைகளை இயலுமானவரை எதிர்வரும் 2014 ஆம் ஆண்டிற்குள் முடிவுக்குக் கொண்டுவர முழு மூச்சுடன் செயற்படுவோமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை இராணுவம் வசமிருந்த 1,375 ஏக்கர் காணிகள் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த அதன் உரிமையாளர்களுக்கே மீண்டும் பெற்றுக் கொடுக்கப்பட்டிருப் பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பலாலி விமானப் படை விஸ்தரிப்பு மற்றும் இராணுவத்தினர் பயன்படுத்தும் இடங்கள் காரணமாக தமது சொந்தக் காணிகளை இழந்தவர்களுக்கென 200 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதெனக் கூறிய அமைச்சர், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வட மாகாணத்திலேயே மாற்றுக் காணிகள் வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com