2016 ஆம் ஆண்டு தாம் விரும்பிய நகர்ப்புற பாடசாலையில் அனுமதி பெறலாம்! - கல்வியமைச்சர்
2016 ஆம் ஆண்டு முதல் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பதிலாக மாணவர்களின் செயற்றிறன் மதிப் பிடும் பரீட்சையில் சித்தியடைவோரில் எவரேனும் ஒருவ ருக்கு நகர்ப்புற பிரபல பாடசாலையில் அனுமதி வேண்டு மாயின், அதற்கேற்ப வெட்டுப்புள்ளியொன்று முடிவு செய்து அறிவிக்கப்படும்என கல்வியமைச்சர் பந்துல குண வர்த்தன குறிப்பிடுகிறார்.
சித்தியடைந்துள்ள 15,000 மாணவர்களுக்கு தற்போது புலமைப்பரிசில் வழங்கப்பட்டுவருவதாகவும், 2016 ஆம் ஆண்டிலிருந்து அத்தொகைமைய 25,000 வரை அதிகரிப்பதற்கு ஆவன செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு மாணாக்கரும் தமக்கு விரும்பிய நகர்ப்புற பிரபல பாடசாலையில் நுழைவினைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment