2015 ஆம் ஆண்டுடன் புலமை பரிசிலுக்கு முற்றுப்புள்ளி!
2016 ஆம் ஆண்டு முதல் 5 ஆம் ஆண்டு புலமைபரிசில் இரத்துசெய்யப்படும். சாதகமான மதிப்பீடு மாத்திரமே இடம் பெறுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டில் இலங்கையில் புலமை பரிசில் பரீட்சை என்ற ஒன்று இல்லை. 2016 ஆம் ஆண்டளவில் புலமை பரிசில் பரீட்சையை நடத்த மாட்டோம் ஏன் என்றால் அவ்வாறு நடத்த வேண்டிய தேவை ஏற்படாது. அதற்கு பதிலாக தேசிய கல்வியியற் ஆணைக்குழு பிறிதொரு விடயத்தை பரிந்துரை த்துள்ளது.
பிள்ளைகளின் வயதிற்கு ஏற்ப பாடசாலைகளில் மேற்கொள்ளும் செயற்பாடுகளின் நிலைகளை மதிப்பிடும் ஒன்றேகால் மணித்தியால செயற்பாடு ஒன்று முன்னெடுக் கப்படும்.
முதலாம், 2 ஆம, 3 ஆம், 4 ஆம் 5 ஆம் வகுப்ப வரை பிள்ளைகளின் கணிதம், சுற்றாடல், பொது அறிவு போன்றன மதிப்பிடப்படும். பிள்ளைகளை அழுத்தங்களுக் குட்படுத்தி அவர்களின் சிறுபராய த்தை மிக மோசமாக பாதிப்படையச் செய்து பெற்றோரிற்கு வீண் செலவீனங்களை ஏற்படுத்தி, பெற்றோருக்கு சுமையை ஏற்படு த்தும் ஒரு பரீட்சையை நாம் 2015 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு கொண்டு வருவோம் என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment