Monday, December 30, 2013

மதுவற்ற ஆண்டாக 2014 பெயரிடப்படும்- சுகாதார அமைச்சு

2014ம் ஆண்டை மது அற்ற ஆண்டாக பெயரிட சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதுடன் அதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தயாரிக்குமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தமக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


மேலும் இந்த வருடத்தில் மட்டும் 54,000 இற்க்கும் அதிகமானோரை போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதற்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர் அதனைவிட பாடசாலைகளுக்கு அருகிலும் போதைப் பொருட்கள் விற்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளத.

இந்த புதிய திட்டமானது போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் வகையிலேயே முன்னெடுத்துவருவதாகலும் இந்த வேலைத்திட்டத்திற்கு அனைத்து அமைச்சுக்களின் உதவியையும் அவசியம் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment