2014 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி அட்டவணை வெளியீடு!
பிரேசிலில் 2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டதுடன் இந்தப்பட்டியலில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் குரூப் பி பிரிவிலும், போட்டியை நடத்தும் பிரேசில் குரூப் ஏ பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
அடுத்த ஆண்டு ஜூன் 12 திகதி முதல் ஜூலை 13ஆம் தேதி வரை பிரேசில் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தகுதிச் சுற்றப் போட்டிகளின் முடிவுகளை தொடர்ந்து ஒரு பிரிவில் நான்கு அணிகள் வீதம் உலகக் கோப்பைக்கான 32 அணிகளைக் கொண்ட போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டது.
அமேஸான் காடுகள் நிறைந்த மனஸ் நகரம் கால்பந்துப் போட்டிகள் நடத்துவதற்கு ஏதுவான இடம் அல்ல என சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையிலும் அங்கு போட்டிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் போட்டியில் பங்குபற்றும் அணிவிபரமும் வெளியிடப்பட்டுள்ளது.
அணிகள் விவரம்
குரூப் ஏ: பிரேசில், மெக்ஸிகோ, குரேஷியா, கேமரூன்.
குரூப் பி: ஸ்பெயின், சிலி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து.
குரூப் சி: கொலம்பியா, கிரேக்கம், ஐவரி கோஸ்ட், ஜப்பான்.
குரூப் டி: உருகுவே, இங்கிலாந்து, கோஸ்டா ரிகா, இத்தாலி.
குரூப் இ: ஸ்விட்சர்லாந்து, ஈக்வேடார், ஃபிரான்ஸ், ஹோண்டூராஸ்.
குரூப் எஃப்: ஆர்ஜென்டினா, போஸ்னியா, ஈரான், நைஜீரியா.
குரூப் ஜி: ஜெர்மனி, கானா, போர்ச்சுகல், அமெரிக்கா.
குரூப் எச்: பெல்ஜியம், அல்ஜீரியா, ரஷியா, தென் கொரியா.
0 comments :
Post a Comment