Monday, December 2, 2013

பண்டாரநாயக்க மண்டப தீப்பரவலில் 200 கண்டுபிடிப்புகள் நாசம்!

பொதுநலவாய நாடுகளின் அமர்வின் போது ஊடக நிலையமாக பயன்படுத்தப்பட்டு வந்த பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் தற்காலிக கட்டிடம் நேற்று முன்தினம் எரியுண்ட போது சுமார் 200 புதிய கண்டுபிடிப்புக்கள் நாசமாகியுள்ளன.
சுற்றாடல்துறை அமைச்சினால் புதிய கண்டுப்பிடிப்பாளர்களின் கண்காட்சி ஒன்று இந்த கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றான பெற்றோலில் இயங்கும் அடுப்பு ஒன்றை இயக்கியபோது தீ ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அங்கு கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 200 புதிய கண்டுபிடிப்புக்கள் நாசமாகின.

குறித்த கட்டிடம் வெறும் பிளாஸ்டிக்கினால் அமைக்கப்பட்டிருந்தமை காரணமாக தீ விரைவாக பரவி முழுமையாக கட்டிடத்தையும் அழித்தது.

இதன்பின்னரே தீயணைப்பு படையினர் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குறித்த மண்டபம் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டு 15 நிமிடங்களில் தீக்கிரையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment