Friday, December 27, 2013

2ஆவது முறையாகவும் காரைதீவு பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் தோல்வி!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள காரைதீவு பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், மேலதிக மூன்று வாக்குகளால் இரண்டா வது முறையாகவும் தோற்கடிக்ப்பட்டுள்ளது.

இப்பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை சபையின் தவிசாளர் செல்லையா இராசையா கடந்தவாரம் முன்வைத்ததை தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து தமிழரசுக் கட்சியின் செயலாளர் இப்பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் தவிசாளருக்கிடையே இணக்கப்பாட்டுக்கு கொண்டுவந்த போதும் அது பயனளிக்கவில்லை.

காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா இராசையா தலைமையில் இரண்டாவது முறையாக சில திருத்தங்களுடன் வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது வரவு- செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக தவிசாளர் மட்டுமே வாக்களித்ததுடன் ஏனைய உறுப்பினர் எதிராக வாக்களித்ததால் மூன்று மேலதிக வாக்குகளால் வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment