முள்ளிவாய்க்கால் முற்றத்தை உடைத்தெறிந்த இந்திய அதிகாரிகள்! 19ஆம் திக்திகுள் பதில் வேண்டுமென்கிறது மதுரை கிளை!
முள்ளிவாய்க்கால் முற்றம் விவகாரத்தில் அரசு தலையிட தடை விதிக்க கோரி பழ.நெடுமாறன் தொடர்ந்த வழக்கில், வரும் 19ஆம் திக்திகுள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பழ.நெடுமாறன் தாக்கல் செய்துள்ள மனுவில், தஞ்சாவூர் மாவட்டம் விளார் கிராமத்தில் பாப்பா நகரில் முள்ளி வாய்க்கால் முற்றம் எங்கள் அறக்கட்டளை சார்பில் பெரும் செலவு செய்து கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் கட்டுவ தற்கு நெடுஞ்சாலைத் துறையிடம் முறையான அனுமதி பெற்றுள்ளோம்.
இந்த நிலையில் எந்த முன் அறிவிப்பும் இன்றி கடந்த நவம்பர் 13ஆம் தேதி முள்ளிவாய்க்கால் முற்றத்தின் தடுப்பு சுவர், நீர்வீழ்ச்சி விளக்குகள், மரங்கள், செடிகள் ஆகியவற்றை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடித்து தள்ளி அகற்றி விட்டனர். அரசின் இந்த சட்ட விரோத செயல் வேதனையை உருவாக்கி உள்ளது. இதனால் எங்கள் அறக்கட்டளைக்கு பண இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் எங்களுடைய முள்ளி வாய்க்கால் முற்றம் கட்டுவதற்கான கட்டுமான அனுமதியை இரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் முள்ளி வாய்க்கால் முற்றம் விவகாரத்தில் தமிழக அரசு தலையிடுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
1 comments :
இந்தியாவில் இருக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கோ, அல்லது இழப்புக்கள், அழிவுகலிருந்து மீளமுடியாமல் கஷ்டப்படும் வன்னி மக்களுக்கோ ஒரு சதம் கூட கொடுத்து உதவியதில்லை உந்த கோமாளிகள்.
எனினும், அவங்களுக்கு ஒரு மண்ணாங்கட்டி முள்ளிவாய்க்கால் ஏன் தேவையாகிறது ?
சுயநலமும், கள்ள நோக்கமும், நயவஞ்சகமும் கொண்ட நரிக் கூட்டம். இவ்வளவு காலமும் ஈழத்தமிழனின் பிணங்களில் பணம் சம்பாதித்து முடிந்து, இப்போ முள்ளிவாய்க்காலை வைத்து ஏதாவது சம்பாதிக்கலாம் என்று திட்டம் போடுவது தெளிவாகிறது.
Post a Comment