Friday, December 20, 2013

நீதிமன்ற நடவடிக்கையின் போது பாட்டிசைத்த ஜஸ்கிறீம் வாகனத்திற்கு 1500 ரூபா தண்டம்!

யாழ். நீதிமன்றத்தில் நேற்று நீதிமன்ற நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும் போது, நீதிமன்றத்திற்கு முன் னால் ஐஸ்கிறீம் வானில் பாடலை ஒலிக்கவிட்டபடி சென்றவருக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் 1500 ரூபா தண்டம் விதித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

நேற்று நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, மேற்படி ஐஸ்கிறீம் விற்பனை செய்யும் வான் பாடலை ஒலிப்பியபடி சென்று கொண்டி ருந்தது.

இதனை தொடர்ந்து பாடலை ஒலித்துக் கொண்டு போன வானை கைப்பற்றுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டதிற்கமைய பொலிஸார் வானைக் கைப்பற் றியதுடன், அதன் உரிமையாளரை கைது செய்து நீதவான் முன்னிலையில் ஆஜர்ப் படுத்தியபோதே குறித்த நபருக்கு 1500 ரூபா தண்டம் விதித்த நீதவான், இனிமேல் இவ்வாறான தவறுகளை செய்ய வேண்டாம் என கடுமையாக எச்சரிக்கை செய்து விடுவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com