Friday, December 27, 2013

ரஷ்ய பெண்ணுக்கு ஆசை காட்டி மோசம் செய்த நபருக்கு 14 வருட சிறை!

2011ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்த ரஷ்ய பெண் பிரஜை ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி 35600 அமெரிக்க டொலர் பணமோசடியில் ஈடுபட்ட அளுத்கம பிரதேசத்தை சேர்ந்த லக்மால் அபேகுணவர்தன என்பவருக்கு 14 வருட சிறைத்தண்டனை மற்றும் 60,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் பெண்ணின் பெயரில் படகு ஒன்றை வாங்கி வியாபாரம் ஆரம்பிப்பதாக கூறி பண மோசடி செய்துள்ளது விசாரணைகளில் தெரியவந்ததை தொடர்ந்து களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி ஸகமபல் திலகரண்ட இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com