Sunday, December 22, 2013

இலங்கை வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து 13 இலட்சம் மோசடி செய்த மூவர் கைது!

யாழ். பருத்தித்துறை இலங்கை வங்கியில் போலி ஆவணங்களைக் கொடுத்து கணக்கை ஆரம்பித்து 13 இலட்சத்தி 34 ஆயிரம் ரூபா பண மோசடி செய்த மூவரை தெல்லிப்பளை விசேட குற்றப்பிரிவுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதிக்கும், 2013 ஜூன் 24 வரையான காலப்பகுதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பருத்தித்துறை இலங்கை வங்கியில் போலி ஆவணங்களைக் கொடுத்து 3 பேர் கணக்கை ஆரம்பித்ததுடன் இக்கணக்கைப் பயன்படுத்தி சுமார், 13 இலட்சத்து 34 ஆயிரம் ரூபா பணத்தை இவர்கள் மூவரும் வங்கியிலிருந்து மோசடி செய்துள்ளதாக கடந்த 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை குறித்த வங்கி முகாமையாளரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

வங்கி முகாமையாளரின் முறைப்பாட்டை அடிப்படையாக கொண்டு இரகசிய விசாரணைகளை மேற்கொண்ட விசேட குற்றப்பிரிவு பொலிஸார் கரவெட்டி, அல்வாய், நெல்லியடிப் பகுதிகளைச் சேர்ந்த 3 பேரையும் கைது செய்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்கள் வேறு குற்றங்கள் ஏதிலும் தொடர்புடையவர்களா என்ற ரீதியில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

No comments:

Post a Comment