Friday, December 20, 2013

எதிர் காலத்தில் 13ம் திருத்தம் மட்டுமல்ல 17வது திருத்தம் பற்றியும் பேசுவாராம் நடிகை நதீஷா

எதிர் காலத்தில் 13ம் திருத்தம் மட்டுமல்ல 17வது திருத்தம் பற்றியும் போசுவேன் எனவும் எதிர்வரும் காலத்தில் பெரிய வேலைத்திட்டம் ஒன்றை செய்யவதற்கு தான் எதிர்பார்த்து உள்ளதாக பிரபல நடிகையும் ஐ.தே.கட்சியின் இளைஞர் அணி இணைப்பாளருமான நதீஷா ஹேமமாலி தெரிவித்து ள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அரசியல் தொடர்பில் நல்ல தெளிவைப் பெற்றே அரசியல் செய்ய வந்ததாகவும் அரசியலுக்கு தான் புதிது என்பதால் அரசியல் குறித்து கற்று வருவதாக தெரிவித்த அவர் தான் அனைத்து விடயங்களிலும் நன்கு சிந்தித்து செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

தனது குடும்பமே ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு எனவும் தனக்கு எந்தவொரு தனி நபரும் சவால் இல்லை எனவும் பொது மக்கள்தான் சவால் எனவும் தெரிவித்த நதீஷாவடம் 13ம் திருத்தச் சட்டம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தான் இந்த ஊடகவியலார் சந்திப்பை ஏற்பாடு செய்து நியமனம் குறித்து அறிவிக்கவே தவிர 13ம் திருத்தம் பற்றி கருத்து வெளியிட அல்ல எனவும் எதிர் காலங்களில் 13ம் திருத்தம் மாத்திரமல்ல 17வது திருத்தம் குறித்தும் பேசுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com