12ஆவது மாடியிலிருந்து குழந்தையை வீச முயன்ற தாயால் பெரும் பதற்றம் !! ( படங்கள்)
வானுயர்ந்த கட்டிடமொன்றின் 12ஆவது மாடியிலிருந்த தனது வீட்டின் ஜன்னலூடாக தனது ஆண் குழந்தையை தூக்கி வீசப் போவதாக பெண்ணொருவர் அச்சுறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட சம்பவம் சீனாவின் ஷங்காய் நகரில் இடம்பெற்றுள்ளது.குறிப்பிட்ட பெண் அழுது கூச்சலி ட்டவாறு தனது குழந்தையை மாடி ஜன்னலுக்குவெளியே தூக்கிப் பிடித்ததுடன் தானும் கீழே குதித்து தற்கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
அந்தப் பெண்ணின் செயலால் வீதியில் சென்றவர்களும் அந்த மாடிக் கட்டிடத்தில் இருந்தவர்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.மாடி ஜன்னலினூடாக குழந்தையை அந்தரத்தில் அங்குமிங்கும் அசைத்த அந்தப் பெண் எவரும் என்னைத் தடுக்க முயற்சிக்க வேண்டாம். நான் எனது மகனை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என கூச்சலிட்டுள்ளார்.
இதனையடுத்து அங்கு கூடிய பெருமளவு பொலிஸாரும் தீயணைப்புப் படை வீரர்களும் அந்தப் பெண்ணையும் அவரது குழந்தையையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.இதன்போது அந்தப்பெண் குடியிருந்த மாடி வீட்டிற்கு மேலாக இருந்த மாடிக் குடியிருப்பில் பிரவேசித்த தீயணைப்பு படை வீரர்களில் ஒருவர் தனது உயிரையும் மதிக்காது, அந்த மாடி ஜன்னலால் கீழே இறங்கி,அந்தப் பெண்ணையும் குழந்தையையும் கீழே விழவிடாது தடுத்து இரு உயிர்களையும் காப்பாற்றினார்.
அதேசமயம் அங்கு வந்த மனநல நிபுணர் ஒருவர் பெண்ணை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து அந்தப் பெண் மனநல மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார்
தொழிலின்றி வீட்டில் இருப்பது குறித்து அந்தப் பெண் மன அழுத்தத்திற்கு உள்ளாகியே தற்கொலை முயற்சியில் இறங்கி யதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment