பாம்பு தீண்டியதில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பாம்பு தீண்டியதில் இதயகுமார் வினோஜன் என்ற 12 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இன்று காலையில் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோதே இந்தச் சிறுவனை பாம்பு தீண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுவதுடன் சிறுவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment