தனது 11 வயது மகனை முதலையின் மரண பிடியிலிருந்து காப்பாற்றிய தந்தை!
சிம்பாப்வேயில் மழை காலத்தில் முதலைகள் தாக்குத ல்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறான முதலை ஒன்றின் தாக்குதலில் சிம்பாப்வேயில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தபாட்ஷ்வா கசேர் என்ப வரும் இவரது 11 வயது மகன் தபிவாவும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தந்தையும், மகனும் தங்கள் கிராமத் துக்கு செல்ல ஆற்றைக் கடந்தனர்.
அப்போது ஒரு முதலை தபிவாவை வாயால் கவ்விப் பிடித்தது. வாய்க்குள் சிக்கிய சிறுவனை கடித்து குதற ஆரம்பித்தது இந்த இக்கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த அவனது தந்தை தபாட்ஷவாவிடம் ஆயுதம் எதுவும் இல்லை. இருந்தாலும் ஆக்ரோஷத்துடன் முதலை மீது பாய்ந்தார். அதன் முதுகில் அமர்ந்து அதன் தாடையை அகற்ற முயன்றார்.
ஆனால் முடியவில்லை. தலையில் தனது கையால் ஓங்கி குத்தினார். இறுதியில் அதன் கண்ணில் ஓங்கி குத்தி கிழித்தார். இதனால் நிலை தடுமாறிய முதலை தனது வாயை திறந்தது. அதை தொடர்ந்து முதலை வாய்க்குள் சிக்கிய சிறுவன் தபிவா மீட்கப்பட்டான்.
எனினும் முதலை கடித்து குதறியதில் சிறுவனது ஒரு கால் துண்டானதுடன் தந்தையின் கையிலும் இரத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
0 comments :
Post a Comment