எந்தக் குழந்தைக்கும் கிடைக்குமா இந்த அதிர்ஷ்டம் ?? 11.12.13.14.15 (படங்கள்)
ஒரு தாய்க்கு குழந்தை பிறப்பதென்பதே அதிசயம்தான். அதிலும்,சிலருக்கு அதிர்ஷ்டவசமான தினங்களில் குழ ந்தை கிடைப்பதென்பதும் அபூர்வமானது தான். அந்த வகை யில், கடந்த 11ஆம் திகதி மாலை 2.15இற்கு ஒரு குழந்தை இங்கிலாந்தின் தென் ஜோக்ஸியர் பகுதியில் பிறந்திருக்கின் றது. இதிலென்ன அதிசயம் என்று எண்ணுகிறீர்களா? அந்த குழந்தை பிறந்த நேரத்தைப் பார்த்தீர்களேயானால் அசந்து போய்விடுவீர்கள். அதாவது 11ஆம் திகதி, 12ஆம் மாதம், 13ஆம் ஆண்டு, 14 மணி, 15 நிமிடத்திற்கு குழந்தை பிறந்திருக்கிறது. 11.12.13.14.15 என்ற அதிசயமே அதுவாகும்.
இங்கிலாந்தின் தென் ஜோக்ஸியர் பகுதியில் றொதெஹாம் பகுதி தொலைத் தொடர்பு நிலையமொன்றில் பணிபுரியும் செல்ஸியா என்ற தாயே, இந்த அபூர்வ குழந்தையினை ஈன்றெடுத்துள்ளார். இந்த அபூர்வ சிசுவிற்கு லாண்டன் ஜொனா என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
தனக்கு பிரசவ வலி எடுத்தபோது தனது கணவரான பென் பிறவுணும் தனது தாயாராரும் உடனிருந்ததாக குறிப்பிட்டார். இப்படியான அதிசய நிகழ்வு இடம் பெறுவதென்பது 52 மில்லியனில் ஒரு தடவைதான் சாத்தியம் என்று குறிப்பிடுகிறார்கள்.
0 comments :
Post a Comment