Saturday, December 21, 2013

காணாமல்போனோர் தொடர்பில் 11,000 முறைப்பாடுகள்!


காணாமல்போனோர் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 6000 முறைப்பாடுகளும் முப்படையினர் மற்றும் பாதுகாப்புத் தரப்பு உத்தியோகத்தர்களிடம் இருந்து 5000 முறைப்பாடுகள் என சுமார் 11,000 முறைபாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக முறைபாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் எச்.டபிள்யூ. குணசேன குறிப்பிட்டார்.

இந்தக்கணிப்பீடு ஆனது 1990 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல்போனோர் தொடர்பிலான விசாரணைகள் இந்த ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன் இரண்டு மாகாணங்களிலும் காணாமல்போனோர் தொடர்பான தகவல்களை நாட்டின் எந்தவொரு பகுதியில் உள்ளவரும் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com