Tuesday, December 17, 2013

சுகாதார சேவையில் பணியாற்ற 10,400 பேருக்கு புதிய நியமனங்கள்!

சுகாதார சேவைக்கு சுமார் 10400 பேருக்கு புதிய நியமனங் கள் வழங்கும் நிகழ்வு இன்று (17.12.2013) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இன்றைய இந் நிகழ்வில் 6025 தாதிகளும் மேலதிக சுகாதார நடவடிக் கைகளுக்கு 1999 பேரும் தாதிப்பயிற்சி பெற்ற 2000 பேரு க்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன.

எனவே இன்று வழங்கப்பட்ட இந்தநியமனத்தின் பின்னர் மருத்துவமனைகளில் பணியாற்றும் தாதிகளின் எண்ணிக்கை முப்பத்தாறாயிரத்துக்கும் அதிகமாகா காணப்படுகிறது எனினும் இந்த நியமனங்கள் அனைத்தும் தாதியர் எண்ணிக் கையை ஐம்பதாயிரமாக அதிகரிக்கச் செய்யும் நோக்கில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மாகாண சபை அமைச்சர்கள் ஐக்கிய தாதிமார் சங்க தலைவர் வண. முறுத்தட்டுவே ஆனந்த தேரர் , சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர்.நிஹால் ஜயதிலக்க மற்றும் தாதிமாரின் பெற்றோர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com