கிளிநொச்சியில் 10,261 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்- அரச அதிபர்!
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னமும் 10,261 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரையில் 40,594 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளதுடன் 33 ஆயிரத்து 79 குடும்பங்களுக்கு வீடுகள் தேவையாகவுள்ளது இவர்களில் 22,818 குடும்பங்களுக்கு அரச மற்றும் அரசசார்பற்ற, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவிகள் மூலம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதிகளவான கண்ணிவெடிகளைக் கொண்ட முகமாலை மற்றும் கிளாலிப் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றது இவை முடிவடைந்ததும் அவ்விடங்களில் 524 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment