Tuesday, December 17, 2013

நாடு பூராவும் மேலும் 1,000 அறிவகங்கள்: லலித் வீரதுங்க!

தகவல் தொழில் நுட்பம் ஆனது கிராமத்துக்கு சென்றடைய வேண்டும் என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய மேலும் 1,000 அறிவகங்கள் திறக்கப்படவுள்ளதாக ஜனாதி பதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.


குறிப்பாக தற்போது நாடு முழுவதும் 350 அறிவகங்கள் திறக்கப்பட்டுள்ளது எனினும் இந்த அறிவகங்களின் எண்ணிக்கை மக்களின் தேவைக்கு போதுமானதாக இல்லாயைால் மக்களின் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் மூன்று எனும் அடிப்படையில் 1,000 அறிவகங்கள் புததாக திறக்கப்படவுள்ளது என ஹோமாகமயிலுள்ள வத்தரக கனிஸ்ட வித்தியாலத்தில் கணணி ஆய்வு கூடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது தெரிவித்தார்.

மேலும் இங்கு கருத்துறையாற்றிய கல்வியமைச்சர் பந்துல குணவர்தன கிராமப்புறங்களிலில் தகவல்தொழிநுட்ப அறிவை விரிவு படுத்தும் வகையில் ஜனாதிபதியால் மஹிந்த சித்தனையின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் இவ்வாறான செயற்திட்டங்களுக்காக நாம் அனைவரும் நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

இன்றைய இந் நிகழ்வில் ஆசியப் பிராந்தியத்துக்கான தொலைத் தொடர்பாடல் கழகத்தின் இயக்குணர் கலாநிதி. யூன் ஜூ கிம், பிரதிப்பணிப்பாளர் சாமில் அல்மா, கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com