Thursday, November 28, 2013

யாழ். ஹற்றன் தேசிய வங்கியில் (HNB); தீ விபத்து!

யாழ். திருநெல்வேலியில் உள்ள ஹற்றன் தேசிய வங்கி (HNB) கிளையொன்றில் இன்று அதிகாலை 5.30 அளவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து யாழ் மாநகர சபை தீயணைப்பு படைக்கு அறிவித்ததை அடுத்து, வங்கிக்கு விரைந்து வந்த அவர்கள் தீயை கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வந்தனர். மின் ஒழுக்கு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சேதம் தொடர்பான மேலதிக விபரங்கள் பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments:

Post a Comment