CHOGM "வர்த்தகப் பேரவையில்" ஜனாதிபதி மஹிந்தவின் உரை!
வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் தமக்குப் பொருத்தமான நிலையான மற்றும் நடைமுறைக்கு சாத்தியமான பொரு ளாதார கொள்கைகளை வகுத்துக்கொள்வதன் மூலமே வறுமையிலிருந்து விடபட முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் நேற்று நடை பெற்ற வர்த்தகப் பேரவை 2013 ல் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்று கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த ஜனாதிபதி அவர்கள் சரியான பொருளா தாரக் கொள்கையை வகுத்து செயற்படும் அபிவிருத் அடைந்து வரும் நாடுகளுக்கு இலங்கையை சிறந்ததொரு உதாரணமாக கொள்ள முடியுமெனவும் சுட்டிக்காட்டி னார். முன்னேற்றம் அடைந்த நாடுகள் மத்தியில் காணப்படும் அரசியல் பொருளாதார முரண்பாடுகளால் ஏற்படுகின்ற உலக நெருக்கடிகளின்போது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளே பாதிப்படைகின்றன.
2016 ஆம் ஆண்டாகும்போது மத்திய வருமானம் பெறும் தேசமாக இலங்கை கட்டியெழுப்பப்படவேண்டும். இதற்கென கடல், ஆகாயம், சுற்றுலாத்துறை, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் புதிய கவனத்தை செலுத்தியுள்ளோம்.
எமது நாட்டில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த பங்கு தாரர்கள் சமூக மற்றும் மனிதவள அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட கூட்டு முயற்சியுனுடாக பொருளா தாரத்தை வளப்படுத்தி வருகிறார்கள்.
எந்தவொரு ஆய்வாளர்களும் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பிலான ஆய்வு களை மேற்கொள்ளும் போது நாட்டின் இன்றைய சாதகமான பெறுபேறுகளுக்கு நடைமுறை சாத்தியமான அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளமையை தெளிவாக இனங்கண்டுகொள்ள முடியும்.
பொருளாதாரத்தை வளப்படுத்துவதென்பது உடல் ரீதியானதோ, தொட்டுணரக் கூடியதோ அல்லது சொத்துக்களை மையப்படுத்தியது என மட்டும் கூறி விடமுடியாது. மனிதனுக்கும் இயற்கைக்குமான மூலதனத்தின் நிலையானதும் தொடர்ச்சியானதுமான முன்னேற்றமாக இது அமைய வேண்டும்.
இதற்காக நாம் எச்சந்தர்ப்பத்திலும் ஓருடலாக செயற்படுவதுடன் எமது பொருளாதா ரத்திற்கு ஏற்றாற் போன்ற பொருத்தமான ஒன்றிணைத்த அணுகுமுறை யினை கையாண்டு சமூக மற்றும் மனிதவள அபிவிருத்தியுடன் பொருளாதார வளத்தினை ஒன்றிணைக்க வேண்டியது அனைவரினதும் கடமை.
40 சதவீதமான வறிய மக்கள் வாழ்கின்ற 118 நாடுகளின் வருமானம் 80 சதவீத முன்னேற்றம் கண்டிருப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இது பொருளாதார வளர்ச்சியினால் ஏற்பட்ட மாற்றமெனவும் வறுமையை ஒழிக்க இத்தகைய வளர்ச்சி இன்றியமையாதது என்றும் கூறினார்.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்கு நாடுகளின் பங்குடைமை அவசியமாகும்.
அந்த வகையில் வளர்ச்சிடையந்து வரும் நாடுகளின் வர்த்தகர் துறையை ஊக்குவிப்பதற்காக மிகவும் முன்னேற்றமடைந்த நாடுகள், ஓரளவு அபிவிருத்தி கண்டு வரும் நாடுகளின் பொருளாதார வளப்படுத்தல் செயன்முறை க்கு உணர்வுபூர்வமாகவும் நேர்மையாகவும் ஆதரவு வழங்க முன்வர வேண்டு மெனவும் ஜனாதிபதி இதன்போது கேட்டுக் கொண்டார்.
0 comments :
Post a Comment