CHOGM ன் முதல்நாள் அமர்வில் ஜனாதிபதி மஹிந்த, கமலேஷ் , சார்ள்ஸ், பிரதமர் ஜுலியா கிலார்ட், ஆகியோர் உரை!
எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஆரம்பமாக வுள்ள CHOGM ன் முதல்நாள் அமர்வுகள் சுமார் ஒன்றே கால் மணித்தியாலங்கள் வரை நடைபெறுமெனவும் உச்சி மாநாட்டின் முதல் நாள் அமர்வில் பொதுநலவாய அமைப் பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரிட்டிஸ் இளவரசர் சார்ள்ஸ், பொது நலவாயத்தின் தற்போதைய தலைவியும், அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமருமான ஜுலியா கிலார்ட் ஆகிய நால்வரும்உரை நிகழ்த்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அனைத்து இலத்திரனியல் ஊடகங்களும் நேரடி ஒலி, ஒளிபரப்பு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்து என தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டொக்டர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு நாளை 09 ஆம் திகதி முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி காலை வரை வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் அரச தலைவர்களும் இலங்கைக்கு வருகை தரவிருப்பதனால் கட்டுநாயக்க கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மத்தள, கண்டி, கல்கிசை ஆகிய பகுதிகளில் என்று மில்லாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
53 நாடுகளின் பங்குபற்றுதலுடன் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன் போதே மேற்கண்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.இதேவேளை, பொது நலவாய மாநாடு தொடர்பில் செய்தி சேகரிக்குமுகமாக உள்நாடு மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த ஆயிரம் ஊடகவியலாளர்கள் இதில் பங்குபற்றுவதாகவும் உள்நாட்டு ஊடகவியலாளர் களுக்கான பொதுநலவாயத் திற்குரிய அடையாள அட்டை இன்று காலை 10 மணி முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு ஹோட்டல் கலதாரியில் வைத்து விநியோகிக்கப்படவுள்ளது என செயலாளர் சரித்த ஹேரத் கூறினார்.
தகவல் சேகரிப்பிற்கான ஊடக மத்திய நிலையம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும். ஊடகவியலாளர் களுக்கான அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளுடனும் கூடிய மத்திய நிலையத்தை பொதுநலவாயத்திற்கான அடையாள அட்டையின்றி எவரும் பயன்படுத்த முடியாதெனவும் செயலாளர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment