Wednesday, November 6, 2013

"ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" CHOGM ல் மன்மோகன் சிங் பங்கேற்கும் வகையில் புதிய வியூகம்

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலை வர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நிச் சயம் கலந்து கொள்ள வேண்டுமென, இந்திய எதிர்க்கட் சியும் வற்புறுத்தியுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக் கின்றன. இந்திய வெளியுறவு அமைச்சு ஏற்கனவே, இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக் கையில், இம்மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்வது அவசியமென்றும், இந்திய அமைச்சர்கள் பலர் இக்கருத்தை வரவேற்றிருந்தமையும், குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு சில சந்தர்ப்பவாதிகளின் தேவைக்காக, இந்திய பிரதமரின் பயணம் இடைநிறுத் தப்படக்கூடாதென்பதே, பெரும்பான்மை இந்திய புத்திஜீவிகளின் நிலைப்பாடாகும்.

இதேநேரம், பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கும் வகையில் புதிய வியூகங்களை இந்திய மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதுடன் வடபகுதிக்கும் பிரதமர் மன்மோகன் சிங் விஜயம் செய்யும் வகையில் பயணத்திட்டத்தை வகுப்பதற்கு இந்திய வெளியுறவு அமைச்சு தீர்மானித்துள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

இப்புதிய வியூகங்கள் மூலம் தமிழகத்தின் எதிர்பார்ப்பை சமாளிக்க முடியுமென இந்திய மத்திய அரசாங்கம் கருதுகின்றது. இந்திய பிரதமர் வடமாகாணத்திற்கு விஜயம் செய்ய வேண்டுமென முதலமைச்சர் சி.வி.;விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளதால், மத்திய அரசு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. வடகிழக்கில் இந்திய அரசின் உதவியில் தமிழர்களின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை ஆய்வு செய்வதன் மூலம் தமிழக மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளலாமென இந்திய மத்திய அரசு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் நடைபெறும் இம்மாநாடானது சர்வதேச ரீதியில் நடைபெறும் மிக முக்கியமான மாநாடு என்பதால் இந்திய பிரதமர் இதில் பங்குபற்ற வேண்டுமென இதன் மூலம் இலங்கை தமிழர்களின் நலனை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென்பதுடன் இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வாய்ப்பாகவும் இம்மாநாட்டை பயன்படுத்த முடியுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வந்துள்ளதுடன் வட மாகாண தேர்தலையும் வெற்றிகரமாக நடத்தியது. அத்துடன் 13 வது திருத்தங்களை அமுல்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் இம்மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சும் பரிந்துரைத்துள்ளது.

3 comments:

  1. உண்மையில் 98% வீத நாடுகள் பங்கு பற்றும் மகாநாட்டுக்கு ஓரிருவர் மட்டும் பங்குபற்றாமல் ஒதுங்குவது புத்திசாலித்தனமல்ல.

    எனவே நாமும் பங்கு பற்றி, சந்தர்பங்களை பாவித்து மற்றைய நாட்டு தலைவர்களுடன் கதைத்து, எமது பிரச்சனைகளை மேலும் விளக்கி எமது காரியங்களை புத்திசாலித்தனமாக சாதிப்பதே சிறந்தது.

    அதைவிட்டு ஒதுங்கி இருப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.

    Who cares us?

    ஒருவரும் எங்களை காணவில்லை என்று தேடவும், கேட்கவும் போவதில்லை.

    நாம், என்ன அவர்களின் கூடப் பிறப்புக்களா? அல்லது அவர்களின் சம்பந்திகளா?

    நன்றாக யோசித்துப் பார்க்கவேண்டும்.!

    எனவே இந்திய பிரதமரும் எமது முதலமைச்சரும், கட்டாயம் அந்த மகாநாட்டில் கலந்து கொண்டு ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்.

    இனியும் எமக்கு சிந்தனையற்ற எதிர்ப்புவாத சாக்கடை அரசியல் வேண்டாம்.

    நன்றி
    ஈழத்தமிழ் மக்கள்

    ReplyDelete
  2. Any government needs not to bow down to its internal cries,while making its foreign policy.

    ReplyDelete
  3. "சனல் 4' ஊடகம் இசைப்பிரியா தொடர்பில் வெளியிட்ட காணொளி கட்டமைக்கப்பட்ட பொய். அது ஒரு நாடகம். இது உலகம் முழுவதிலிருக்கும் மக்களுக்கும் தெரியும். தனது பொய் அம்பலமாகிவிட்டது என்பதற்காகவே கெலும் மக்ரே இவ்வாறு சொல்கிறார்.

    தனது ஆவணப்படத்தின் மீதான சந்தேகத்தை இல்லாமல் செய்யவே இவ்வாறு சொல்லியிருக்கக் கூடும். அந்த காணொளியில் பாருங்கள். அதில் காட்டப்படும் பெண்ணின் முகத்தில் பயம் தெரிகின்றதா? புன்சிரிப்புத் தெரிகின்றதா? இவ்வாறு நான் கேட்கவில்லை. உலக மக்கள் கேட்கின்றனர்.

    இராணுவச் சிப்பாய் தான் தந்தார் என்றால் உண்மையான ஆதாரங்கள் அவரிடம் இருக்குமானால் அதனை உரியவர்களிடம் கொடுக்கலாம் தானே.

    சரி, குறித்த காணொளியில் அந்தப் பெண் மீது வெள்ளைத்துணி போர்த்தப்படுகிறது. அந்த உச்சமாக நடைபெற்ற போர் நேரத்தில் எப்படி வெள்ளைத் துணி அங்கு வந்திருக்கும். அதுவும் சிறிதும் கறைபடாத புத்தம் புதிய துணியாக அது எப்படியிருக்கும்.

    இசைப்பிரியாவைப் பற்றி நான் சொல்ல வேண்டும். அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பயிற்சி பெற்ற ஒரு போராளி. அதுவும் லெப்டினன்ட் கேணல் தரத்தைச் சேர்ந்தவர். அவர்களின் தொலைக்காட்சியில் வேலை செய்தவர். போரின் இறுதிக்கட்டத்தில் அவர்களின் தொலைக்காட்சி இருக்கவில்லை.

    அப்பாவிச் சிறுவர்களையே ஒரு வாரப் பயிற்சியோடு போர்க்களத்துக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன். இதற்கு எம்மிடம் ஆதாரங்கள் உள்ளன. இறுதிக் கட்டத்தில் எங்களிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர்கள் இதற்குச் சாட்சி. இந்த அப்பாவிச் சிறுவர்களையே இறுதிக்கட்டத்தில் போருக்கு அனுப்பிய பிரபாகரன், பயிற்சி பெற்ற இசைப்பிரியாவை போருக்கு அனுப்பாமல் விட்டிருப்பாரா?

    புலம்பெயர் தமிழர்களில் 90 சதவீதமானவர்கள், நல்லவர்கள். 10 சதவீதத்தினரே எல்லாக் குழப்பமும் செய்கின்றனர். இதுவரை காலமும் போருக்கு ஆயுதங்கள் வாங்கப் பணம் அனுப்பியவர்கள், இப்போது ஊடகங்களை வாங்குகின்றனர்.

    கெலும் மக்ரேயின் மனைவி ஒரு தமிழ்ப் பெண். அவரை வைத்தே மக்ரேயை அணுகியுள்ளனர். மக்ரே வெறும் பொம்மை தான். புலம்பெயர் தமிழர்களின் ஆட்டுவிப்புக்கு அவர் ஆடவேண்டியது தான். பிச்சைக்காரன் எப்போதும் புண்ணைக் காட்டியே பிச்சை எடுப்பான். புண் மாறிவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

    அதேபோன்று தான் 10 சதவீதமான புலம்பெயர் தமிழர்களும். அவர்கள் இலங்கையில் மீண்டும் போரை உருவாக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் பாடுபடுவது தமது சொந்த நலனுக்காகவே அன்றி தமிழ் மக்களுக்காக அல்ல

    ReplyDelete