மஹிந்த ராஜபக்ஷ தேசிய நல்லிணக்கத்திற்காக பெரும் பங்காற்றி வரும் ஒரு தலைவர் - CHOGM மக்கள் பேரவையில் மலேசிய பிரதிநிதி!
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசிய நல்லிண க்கத்திற்காக பெரும் பங்காற்றி வரும் ஒரு தலைவராவார். கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஊடாக இது தெளிவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலி ஹிக்க டுவை சாயா ட்ரான்ஸில் இடம்பெறும் பொதுநல வாய மக்கள் பேரவை மாநாட்டின் முதலாவது அமர்வில் கலந்து கொண்ட மலேசிய பிரதிநிதி டொக்டர் ஜெமீலா மஹ்மூத் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் பொதுநலவாய நாடுகளின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு இவ் அமர்வு இன்றியமையாததாகும். 2015 ஆம் ஆண்டில் இவ் அபிவிருத்தி திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்கும் நோக் கில் தற்போது இப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. இதில் சிவில் அமைப் புக்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். இவ் அபிவிருத்தி திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஒன்றிணையுமாறு நான் அழைப்புவிடு கின்றேன். இதில் சிவில் அமைப்புக்களின் பங்களிப்பு இன்றியமையாததென்பதனால் அனை வரது யோசனைகளையும் நான் வரவேற்கின்றேன.
பொதுநலவாய மக்கள் மாநாட்டின் காலி ஹிக்க டுவை சாயா ட்ரான்ஸ் ஹோட் டலில் இன்று முற்பகல் ஆரம்ப மானது. இம்மாநாட்டின் இணை தலைவர் கலாநிதி லலித் சந்திரதாச இவ் அமர்வின் முக்கியத்துவம் தொடர்பாக எடுத்து ரைத்தார்.அபிவிருத்தியையும் முன்னேற்றத்தையும் அடைவதே எமது அடிப்படை இலட்சியமாகும். இதற்காக நாம் அனைவரும் பொதுவான பின்புலத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான் பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும்.
அபவிருத்தி அடைவதற்கான சாத்தியக்கூறுகளை உங்களால் இனங்காண முடியும். இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் வெற்றிகரமாக பங்கேற்பதன் மூலம் அவ் இலக்குகளை அடையலாம பொதுநலவாய நாடுகளு க்கான அபிவிருத்தி திட்டங்களை வகுப்பதில் இக்கலந்துரையாடல் இன்றிய மையாதது. 2015 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தி திட்டங்களை வெற்றியடையச் செய்வதற்கான கலந்துரையாடலில் தற்போது நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
இதில் சிவில் அமைப்புக்களின் காத்திரமான பங்களிப்பு மிகவும் அவசியம். இவ் அபிவிருத்தி ;திட்டங்களை வெற்றிபெறச் செய்வதற்காக அனைவரும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். சிவில் அமைப்புக்களுக்கு விசேட பொறுப்பும் கடமையும் இருப்பதால் அனைவரும் தங்களது கருத்துக்களை முன்வைக்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.
உணவு பாதுகாப்பு, காலநிலை மாற்றம், மகளிருக்கான பொருளாதாரத்தை ஊக்குவித்தல், வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சிவில் அமைப்புக்கள் இம்மாநாட்டில் பங்கேற்று தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
0 comments :
Post a Comment