Thursday, November 7, 2013

CHOGM ற்காக எந்தெந்த வீதிகள் எப்போது, எவ்வளவு நேரம், மூடப்படும்! முழுவிபரம் ! - பொலிஸார்

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டையொட்டி, விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளன. நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை, பொதுநலவாய அரச தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், அவர்கள், 16, 17 மற்றும் 18 ம் திகதிகளில், இங்கிருந்து புறப்படவுள்ளனர்.

இதன் பிரகாரம் கட்டுநாயக-கொழும்பு அதிவேக பாதை, புதிய களனி பாலம், பண்டாரநாயக சுற்று வட்டம், ஊறுகொடவத்த சந்தி, தெமட்டகொட சந்தி, பொரளை சந்தி, கனத்தை சுற்றுவட்டம், பேஸ்லைன் வீதி, பௌத்தாலோக மாவத்தை, தும்முல்ல சந்தி, பம்பலபிட்டி சந்தி, காலி வீதி, கொள்ளுபிட்டி சந்தி, காலி முகத்திடல் சுற்றுவட்டம், பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம், லோட்டஸ் வீதி, வங்கி வீதி, செரமிக் சந்தி, ரீகல் சந்தி, சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொம்பனித்தெரு, கொம்பனித்தெரு பொலிஸ் சுற்று வட்டம் ஆகிய வீதிகளில் அரச தலைவர்கள் வருகை தரும்போது, 20 நிமிடங்களுக்கு போக்குவரத்து இடைநிறுத் தப்படவுள்ளது.

எதிர்வரும் 15ம் திகதி பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில் நடைபெறுவதனால், கொம்பனிவீதி சுற்று வட்டம், சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, ரீகல் சந்தி, செரமிக் சந்தி, வங்கி வீதி, லோட்டஸ் வீதி, பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம், காலி வீதி, கொள்ளுபிட்டி சந்தி, லிபர்டி சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, செஞ்சிலுவை சந்தி, பொது நூலக சுற்றுவட்டம், தாமரை தடாக வீதி ஆகிய வீதிகளில் வாகன போக்குவரத்து காலை 8 மணி முதல் முற்பகல் 10 மணி வரை, தேவைக்கேற்றாற்போல் 20 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது அமர்வு நடைபெறும் 15ம் திகதி பண்டாரநாயக மாநாட்டு மண்டபத்திற்கு பிரவேசிக்கம் வீதிகளான தாமரை தடாக மாவத்தை, நந்தா மோட்டர்ஸ் சந்தி, சுதந்திர சதுக்க வீதி, பொதுநிர்வாக அமைச்சு சந்தி, மேட்லேன் பிளேஸ், பௌத்தாலோக மாவத்தை ஆகியவை இடையிடை 20 நிமிடங்கள் போக்குவரத்திற்காக மூடப்படும்.

எதிர்வரும் 14ம் திகதி கட்டுநாயக விமான நிலையம் இலங்கைக்கு விஜயம் செய் யும் இளவரசர் சார்ள்ஸ், கட்டுநாயக அதிவேக வீதி, பேஸ்லைன் வீதி, இங்ரம் சந்தி, தெமட்டகொட, பொரளை, சேனாநாயக சந்தி, ஹோட்டன் பிளேஸ், விஜயராம மாவத்தை ஊடாக ரொஸ்மிட் பிளேஸில் உள்ள டிங் டேகல் ஹொட்டேலுக்கு விஜயம் செய்யவுள்ளதால், இப்பாதைகள் 20 நிமிடங்கள் போக்குவரத்திற்காக மூடப்படவுள்ளது.

எதிர்வரும் 15ம் திகதி தாமரை தடாகம் கலையரங்கில் நடைபெறும் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கும் இளவரசர் சார்ள்ஸ் வருகை தரும்போது, டிங் டேகல் ஹொட்டேலிலிருந்து ரொஸ்மிட் பிளேஸ், விஜயராம மாவத்தை, ஹோட்டன் பிளேஸ் மற்றும் தாமரை தடாக கலையரங்கு வரையிலான வீதி, போக்குவரத்திற்கு மூடப்படுமென, பொலிஸார் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 16 மற்றும் 17ம் திகதிகளில் வோட்டஸ் ஏஜ் ஹொட்டேலில் நடைபெறும் விசேட நிகழ்வின்போது கொம்பனித்தெரு சுற்றுவட்டம், சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, ரீகல் சந்தி, செரமிக் சந்தி, வங்கி வீதி, லோட்டஸ் வீதி, பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம், காலி வீதி, கொள்ளுபிட்டி சந்தி, லிபர்டி சுற்றுவட்டம், தர்மபால வீதி, செஞ்சிலுவை சந்தி, பொது நூலக சுற்றுவட்டம், தாமரை தடாக வீதி, ஹோட்டன் பிளேஸ், ஹோட்டன் கிங்ஸி வீதி சந்தி, டி.எஸ். சேனாநாயக சந்தி, தேவி பாலிகா கல்லூரி வீதி, காசல் வீதி, ஆயுர்வேத சந்தி, பாராளுமன்ற வீதி, பொல்துவ சந்தி ஊடாக வோட்டஸ் ஏஜ் ஹொட்டேலுக்கு பிரவேசிக்கும் வீதிகளிலும், 20 நிமிடங்கள் போக்குவரத்து இடைநிறுத்தப்படவுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com