CHOGM உம் நடந்தது! கூடவே வல்லுறவும் நடந்தது!!
கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாயத் தலைவர்களின் மாநாட்டில் பாதுகாப்புக் கடமைக்காக சேவையில் அமர்த் தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பெண் ணொருவரை வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றம் சுமத் தப்பட்டதால், கொள்ளுப்பிட்டிய பொலிஸார் குறித்த பொ லிஸ் உத்தியோகத்தரை கைதுசெய்துள்ளனர்.
தனது மார்பகங்களைjத் தடவி, முகத்தில் முத்தமிட்டதாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தனியார் நிறுவனமொன்றில் சுத்திகரிப்பாளராகப் பணிபுரியும் பெண் குறிப்பிட்டுள்ளார். குறித்த பெண்மணியின் மனுவை ஆராய்ந்தே பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலேவல பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment