CHOGM குழுவினர் இன்று புதன்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம்!
பொதுநலவாய மாநாட்டு பிரதிநிதிகளில் ஒரு குழுவினர் இன்று புதன்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவு ள்ளனர். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விசேட விமானம் மூலம் மட்டக்களப்பு விமான நிலையத்தை வந்தடையும் குழுவினர் அங்கு வரவேற்கப்பட்டு மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள முதியோர் பூங்காவுக்கு அழைத்து வரப்படு வர்.
முதியோர் பூங்காவில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி. எஸ்.எம்.சாள்ஸி னால் இக்குழுவினர் வரவேற்கப்பட்டு மாவட்டச் செயலகத்துக்கு அழைத்துச் செல்ல ப்படுவர். செயலகத்தில் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடலை மேற்கொண்ட பின்னர் இயந்திரப் படகு மூலம் மட்டக்களப்பு வாவியில் பயணம் செய்து மட்டக்க ளப்பைப் பார்வையிடவுள்ளனர்.
நாளை வியாழக்கிழமை புல்லுமலை, உறுகாமம், மங்களகம ஆகிய மீள்குடி யேற்றக் கிராமங்களுக்கு விஜயம் செய்து மூவின மக்களையும் சந்திப்பர். அதன் பின்னர் கறடியனாறு விவசாயப் பண்ணை சத்துருகொண்டான், சர்வோதய மாவ ட்ட நிலையம், சுவிஸ் கிராமம், சுனாமி வீடமைப்புத் திட்டம் ஆகியவற்றையும் பார்வையிட்ட பின்னர் விமானம் மூலம் கொழும்பு திரும்புவர்.
0 comments :
Post a Comment