பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் தாயகத்திற்கு எதிராக மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ள சூழ்ச்சிகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. புலம்பெயர் தமிழர்கள், நாட்டுக்கு எதிரான அரச சார்பற்ற அமைப்புக்களும், இச்சூழ்ச்சியின் பின்னணியிலிருப்பதாக புலனாய்வு துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
நாட்டுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நடைபெறும் அடுத்த சில நாட்களுக்குள் நாட்டக்கு எதிரான சூழ்ச்சிகளை முன் னெடுப்பதற்கு என்.ஜீ.ஓ கும்பல்கள் திட்டம் தீட்டுவதாக தகவல்கள் கசிந்து ள்ளன.
பொதுநலவாய அரச தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் நாட்டிலிருக்கும் காலப்பகுதியில் தாயகத்திற்கு எதிரான இந்த சூழ்ச்சிகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள், எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்களும் டொலர்களினால் பிழைப்பு நடத்தும் நாட்டுக்கெதிரான என்.ஜி.ஓ கும்பல்களும் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொல்லப்பட்ட எல்.ரி.ரி.ஈயினரை நினைவு கூர்ந்து ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட இராணுவ வீரர்கள் மீதும் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி இந்த சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு வருவதாக புலனாய்வு துறையினர் தெரிவிக்கின்றனர்.
நாட்டை அழித்த பயங்கரவாதிகளை நினைவு கூர்ந்து கொழும்பை கேந்திரமாக கொண்டு தீபமேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் இவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழ்ச்சியின் பின்னணியில் கடந்த காலங்களில் தாயகத்திற்கு எதிராக ஜெனீவா சென்று சூழ்ச்சி செய்த என்.ஜீ.ஓ. கும்பல்களும் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுற்றுலா வீசாவை பெற்று நாட்டில் பிரவேசித்து இலங்கைக்கு எதிராக சூழ்ச்சி செய்வதற்கு திட்டமிட்டிருந்து நாட்டை விட்டு வெளியேற்றிய அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இந்த சூழ்ச்சியின் பங்காளர்கள் என உறுதியாகியுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டின் ஊடாக இலங்கைக்கு எதிராக செயற்ப டுவதற்கு கடும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ள என்.ஜி.ஓ. செயற்பாட்டாளர்களும் இச்சூழ்ச்சியின் பின்னணியிலிருந்து செயற்பட்டு வருவதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நடைபெறும் அடுத்த சில நாட்களில் தாயகத்தின் மீது சேறு பூசும் சூழ்ச்சியில் வெளிநாட்டு பணத்தினால் பிழைக்கும் சுதந்திரத்தின் மேடை எனும் அரச சார்பற்ற அமைப்புக்களின் செயற்பாட்டாளரான பிரீட்டோ பெர்னாண்டோ செயற்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது என புலனாய்வு தரப்பினர் உறுதிப் படுத்தியுள்ளனர்.
எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் திட்டங்களின் அடிப்படையில் நாட்டுக்கு எதிரான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
National security of the country should be tightened to maximum to save the country from tritors.We need a tight grip to save our land.We should know that we can enjoy the democracy only to a certain extent and not to behave as traitors for a little concessions.
ReplyDeleteSEe the photo grapher of Waligamam demostration in Jaffna? where one whigt man taking a video evidence,
ReplyDeleteThis gay is on a TOURIST VISA in JAFFNA, how can he be a journalist??? this personnshoul be in under arrest and do not any body leeve him to get flight from Colombo,