Sunday, November 10, 2013

CHOGM ல் மன்மோகன் சிங் பங்குபற்ற மாட்டாராம் - இந்தியப் பத்திரிகைகள்

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார் எனவும் அதே நேரத்தில், வெளியுறவு அமை ச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான இந்தியக் குழு கொழும்புவுக்குச் செல்லும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மன்மோகன் சிங் தனது முடிவு குறித்து இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் மூலம் தெரிவிப்பார் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின்னரே, பிரதமரின் புறக்கணிப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப் படுகின்றது.

அதேவேளையில், கொழும்பில் நவம்பர் 15 முதல் 17 வரை நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டில், பிரதமருக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பார் எனவும் அவரது தலைமையில் கொழும்பு பயணம் செல்லும் இந்தியக் குழுவில், வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங், கூடுதல் செயலாளர்கள் பவண் கபூர், நவ்தேஷ் சர்மா உள்ளிட்டோர் இடம்பெறுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக அரசு, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் அமைச்சர்களின் வலியுறுத்தல்கள் காரணமாக, இலங்கைக்குச் செல்வதில்லை என்று பிரதமர் முடிவெடுத்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், வெளியுறவுக் கொள்கை மற்றும் தேச நலனின் அடிப்படையில் அம்மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

4 comments :

ஈய ஈழ தேசியம் ,  November 10, 2013 at 1:13 PM  

தமிழ்நாட்டு அரசியல் கோமாளிகளை திருப்திபடுத்த இவர் இப்படி எல்லாம் நடக்க வேண்டியிருக்கிறது.

Anonymous ,  November 10, 2013 at 5:35 PM  

It is laughable that india's PM being
controlled by a handful of tamil nadu men who blow their trumpets as best politicians.It is regrettable even the foreignb policy of the country being decided in TN

Anonymous ,  November 11, 2013 at 7:53 AM  

Bible frankly says man has dominated for man's injury.

Anonymous ,  November 11, 2013 at 10:12 AM  

However India will represented by some other VIP's it means India too
taking part in the conferrence.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com