Tuesday, November 5, 2013

பாதுகாப்பு மற்றும் தந்திரோபாய ஆர்வம் எனும் அடிப்படையில் இந்திய பிரதமர் CHOGM ல் பங்குபற்ற வேண்டும் -வெளிவிவகார அமைச்சு

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது மிகவும் இன்றியமையாதது என இந்திய வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. "பாதுகாப்பு மற்றும் தந்திரோபாய ஆர்வம் எனும் இந்தியாவின் நோக்கத்தின் அடிப்படையில்" இம்மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவிலுள்ள பல்வேறு கட்சிகளும் இந்திய பிரதமர் இம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான பாரதீய ஜனதாவும் இந்தியா பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதில் தமக்கு எதுவித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்துள்ளது.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வர்த்தக அமைச்சர் சுதர்ஸன நாச்சியப்பன், ஆகியோரும் இந்தியா இம்மாநாட்டில் பங்கேற்பது அதன் பாதுகாப்புக்கும், நலனுக்கும் இன்றியமையாது என தெரிவித்துள்ளன. இம்மாநாட்டில் இந்தியா பங்கேற்பதன் மூலம் இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் இந்திய மீனவர் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த கூடிய வாய்ப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ள இவர்கள் இவரும் இந்தியா பேசாவிட்டால் வேறு எந்த நாடு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

4 comments :

Anonymous ,  November 5, 2013 at 7:54 PM  

We do hope that diplomacy is much more important than anything else.
as usual diplomatic ties between two neighbouring countries is really inevitable.Delhi government has to consider this as a vital issue.

Anonymous ,  November 6, 2013 at 12:33 AM  


May be that's correct.

Anonymous ,  November 6, 2013 at 10:29 AM  

Dr.Manmohansingh also considered as one of the world's leader,he has the charisma and energy,whereas he is totally disturbed to the circus of the rats.How he would the challenge
the powerful countries in some important issues.

Anonymous ,  November 6, 2013 at 12:09 PM  

HE MIGHT GET THE PERMISSION FROM T/NADU AND REACT ACCORDINGLY

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com