Friday, November 8, 2013

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத ஊடுருவலை தடுக் யூ.ஜீ.எஸ். சென்சார் கருவிகள்!

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவலை தடுக்க யூ. ஜீ.எஸ். சென்சார் கருவிகள்! இந்திய-பாகிஸ்தான் எல்லை யில் தீவிரவாத ஊடுருவல் முயற்சி அடிக்கடி நடக்கிறது. ஜம்மு கதுரா பகுதியில் கடந்த செப்டெம்பர் மாதம் ஊடு ருவிய தீவிரவாதிகள் இராணுவ வீரர்கள் உட்பட 12 பேரை சுட்டுக் கொன்றனர். இதுபோன்ற தாக்குதலை முறியடிப் பதற்கான வழிகள் குறித்து எல்லை பாதுகாப்புப் படை ஆராய்ந்தது.

வெளிநாடுகள் சிலவற்றில் எல்லைப் பகுதியில் 'அன்டன்டட் கிரவுண்ட் சென்சார் (யூ.ஜி.எஸ்) கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற் கொள்ளப் படுகின்றன.பொருட்கள் மற்றும் ஆட்கள் நடமாட்டத்தை கண்டுபிடிக்க அகச் சிவப்பு சென்சார் கருவிகளும், வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டால் அதை கண்டறிய காந்த சென்சார் கருவிகள், அதிர்வுகள் மூலம் ஊடுருவலை கண்டறிய 'சீஸ்மிக் சென்சார்'கருவிகள் எல்லைப் பகுதியில் பயன்படுத்தப்படு கின்றன.

எல்லையில் ஊடுருவல் நடந்தால் இந்த சென்சார்கள் கருவிகள் அனுப்பும் எச்சரிக்கையை கையில் எடுத்துச் செல்லும் ரீசிவரில் கண்டறியலாம். பாகிஸ்தான் தீவிரவாத ஊடுருவலை முறியடிக்கவும், வீரர்களின் உயிரிழப்பை தடுக்கவும் இது போன்ற யூ.ஜி.எஸ். சென்சார் கருவிகளை இந்தியா, பாகிஸ்தான் எல்லை பகுதி களில் பொருத்த வேண்டும் என எல்லை பாதுகாப்புப் படை விருப்பம் தெரிவித் துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com