இலங்கை நிலைப்பாட்டை வாயாராப் புகழ்ந்தார் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி!
மோதல்கள் நிறைவடைந்துள்ளன. சமாதானமும்,அபிவி ருத்திகளும் பெறுமதி மிக்கவை. மோதல்களும் முடிவடை ந்ததை தொடர்ந்து இலங்கை பெற்றுள்ள முன்னேற்றங்கள் பாராட்டத்தக்கவை என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி எபர்ட் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.பொதுநலவாய அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் சிறிமாவோ பண்டா ரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார்.
ஆட்கடத்தல், வர்த்தகம் தொடர்பான நெருக்கடிகளின் போது இலங்கை அவுஸ் திரேலியாவுக்கு வழங்கிய ஒத்துழைப்புக்களை பாராட்டுவதாகவும் அவுஸ்திரேலிய பிர தமர் ஜனாதிபதியிடம் கூறினார். புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டமைப்பு செய ற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி அவுஸ்திரேலிய பிரதமருக்கு விளக்க மூட்டினார். தற்கொலை குண்டுதாரிகளாக பயிற்சி பெற்ற ஆயிரத்து 400ற்கும் மேற்பட்ட எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களை விடுவிக்கும் போது அச்சுறுத்தல்கள் காணப்பட்ட போதிலும் மிக குறுகிய காலத்திற்குள் அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து சமூக மயப்படுத்தியதாகவும் ஜனாதிபதி கூறினார்.
மோதல்கள் முடிவடைந்து ஒரு சில மாதங்களுக்குள் சிறுவர் படையினரை அவ ர்களின் பெற்றோரிடம் பொறுப்பளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனாதிபதி கூறினார். தீர்மானங்களை எட்டும் போது நாம் அவசரப்பட வேண்டிய தேவையில்லை. ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் அவுஸ் திரேலிய பிரதமர் கூறினார்.
கற்றபாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் மற்றும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக முன்னெ டுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பில் வெளிவிவிகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளித்தார். வடமாகாண பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தெளிவுபடுத்தினார்.
1 comments :
A man of great political aspiration.
He has high sense of humour and capable of judging the circumstances
accordingly.
We need people like mr.Tony Abberts,
to coop up in our matters
Post a Comment