Thursday, November 7, 2013

இந்திய வெளிநாட்டு கொள்கையில் பிராந்திய (தமிழக ) கட்சிகளுக்கு தலையிடும் உரிமை இல்லை! - திடமான அறிவித்தல்

இந்திய வெளிநாட்டு கொள்கையில் பிராந்திய கட்சிகளுக்கு தலையிடும் உரிமை இல்லையென, மகுடம் இட்டு ஆசிரி யர் தலையங்கம் தீட்டியுள்ள ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை, தமிழக கட்சிகள், பொதுநலவாய மாநாடு தொட ர்பில், இந்திய மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்கி வருவதாகவும், அவ்வாறு மத்திய அரசின் வெளி நாட்டு கொள்கைகளில் அழுத்தங்களை செலுத்தும் உரிமை, பிராந்திய கட்சிகளுக்கு இல்லையென்றும், அப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டு ள்ளது.

இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில், தமிழ் தலைவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசுடன் பேசி, பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டுமென, ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை, ஒரு கால்பந்தாக ஏன் மாற்றப்படு கின்றது என்ற கேள்வியையும், ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை எழுப்பியுள்ளது. தற்போது பாஜக உள்ளிட்ட தமிழ கட்சிகள், பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், யுத்தத்தினால் மக்கள் இன்னல்களுக்குட்பட்ட போது, இக்கட்சிகள் மௌனம் சாதித்ததாக, அப் பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய வெளிநாட்டு கொள்கையில் பிராந்திய நலன் மற்றும் இன ரீதியான அடையாளங்கள் உள்வாங்கப்படுவதை, அனுமதிக்கக்கூடாதென தெரிவித்துள்ள ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை அரசாங்கத்துடன் அழுத்தங்களை மேற்கொள்வதற்கான காரணங்கள் எதுவும் இந்திய அரசாங்கத்திற்கு கிடையாது எனவும், தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லையென்றெ மனத்தாக்கங் கள் அம்மக்களுக்கு உள்ளபோதும், அவர்கள் தொடர்பில் இந்தியாவில் பேசுவதற்கு ஒருவரும் இல்லையென்பதை நினைவில் கொள்ள வேண்டுமென்றும், தமிழ் மக்களின் தலைவர்கள், ஜனாதிபதியுடன் பேசி, பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண வேண்டுமென்றும், அப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மாநாட்டில் பங்கேற்பதை தடுப்பதன் மூலம், எதுவித பயனும் ஏற்படப்போவதில்லையென்றும், இம்மாநாட்டின் மூலம் தனிப்பட்ட ஒரு நாட்டை மட்டுமல்லாமல், பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளின் பிரச்சினைகளும் பேசப்படுவதனால், இந்தியாவின் குரல் இம்மாநாட்டில் ஒலிப்பது அவசியமென்றும், ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

2 comments :

Anonymous ,  November 7, 2013 at 4:02 PM  

This is the real meaning of the foreign policy.Each Government has to decide how to maintain its diplomatic ties with the other countries,not a state government or petty political parties have the rights to decide or oppose.Well done Hindustan Times.This could be a good lesson for the future.

Anonymous ,  November 7, 2013 at 11:49 PM  

Yes, this is a correct respond for LTTE funds living TAMIL NAADU politiciens like NEDUMARAN, Y.Gopalsami, Thirumavalavan, SEEMAN, Ramathas,PORUKKI KAASI AANANTHAN ETC

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com