தலைநகரில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடாத்த இடமளிக்கப்படாது: அரசாங்கம்!
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு எதிர்வரம் வாரம் நடைபெறவுள்ளதால் இனி தலைநகர் பகுதியில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடாத்த இடம ளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் அல்லது யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக் கப்படுவதால் உலகத் தலைவர்கள் பயணம் செய்யும் பாதைகள், தங்கியிருக்கும் ஹோட்டல்கள் மற்றும் பயணம் செய்யும் இடங்களில் எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
2010 மற்றும் 2012ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனுக்கு விஜயம் செய்திருந்த போது எதிர்நோக்கிய அசௌகரியங்கள் வேறும் நாட்டுத் தலைவர் களுக்கு ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் தெரிவித் துள்ளது.
இம்மாநாட்டு அமர்வுகளின் போது புறச்சக்திகளின் தலையீடு குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்ததுடன் சில நாடுகள் பயங்கரவாதத் திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருவதனால் அவ்வாறான நாடுகளின் தலைவர்களுக்கு எதிராக போராட்டங்களை நடாத்த புறச்சக்திகள் இலங்கையை களமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் எனவே, மாநாட்டு அமர்வுகள் நடைபெறும் காலத்தில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு இடமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment