அடுத்த பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு மோல்டாவில்
2015ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அரச தலைவர் களின் மாநாடு தென் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மோல்டாவில் நடைபெறும் என இன்று நடைபெற்ற அமர் வில் பொதுநலவாய அரச தலைவர் களால் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை, மனித உரிமைகளை மதிக்கும் விஷயத்தில் பெரிய முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என்பதால் மொரிஷியஸ் பிரதமர் இலங்கை மாநாட்டை புறக்கணித்ததுடன், எதிர்வரம் 2015 ஆம் ஆண்டு மாநாட்டை யும் நடாத்துவதற்கு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து அடுத்த மாநாடு மோல்ட்டாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதே வேளை இதற்கு முன்னர் 2005ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாடுகள் மோல்டாவில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment