Thursday, November 7, 2013

சிறிதரன் எம்.பியின் காம விளையாட்டுக்காக குற்றம் செய்யாமல் ஜெயில் சென்ற இருவரும் விடுதலை

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறி தரன் அவர்களின் அலுவலக்தில் இருந்து தாம் செய்யாத குற்றத்திற்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சிறிதரனின் பிரத்தியேகச் செயலாளர் பொன்னம்பலம் லட்சுமிகாந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேலமாலிகிதன் ஆகிய இருவரும் நேற்று முன் தினம்(05) கொழும்பு நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனைத் தொடர்ந்து மாவை சேனாதிராஜா கூட்டமைப்பு தலைவராக செல்ல வேண்டும் எனவும் அதன் பின் தான் கூட்டமைப்பின் செயலாளர் ஆக வரவேண்டும் எனவும் கனவு கண்டு கொண்டு இருக்கும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் செய்த குற்றத்திற்காக இருவர் தமது வாழ்வைத் தொலைத்து விட்டு இன்று மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

சி.சிறிதரன் அதிபராக இருந்த காலப்பகுதியில் இருந்தே பெண்களுடன் தவறான நோக்கத்துடன் பழகும் பழக்கம் உடையவராக விளங்கினார். இவர் தவறாக பெண்களுடன் நடந்து கொண்டதை கண்டு கொண்ட இவரது உறவினரான புலிகளின் கட்டளைத் தளபதி கேணல் தீபன் இவரை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டியுள்ளார்.

இதையும் பொருட்படுத்தாது சிறிதரனின் காம விளையாட்டுக்கள் தொடர்ந்ததால் கேணல் தீபன் சிறிதரனை சுட முற்பட்டதாகவும் அதனை அவரது மனைவி கெஞ்சி மறித்ததாகவும் முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தமை யாவரும் அறிந்த விடயம்.

அதன் பின் அடங்கிப் போயிருந்த சிறிதரன் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தனது காம லீலைகளை மீளவும் அரங்கேற்றத் தொடங்கினார். புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் கூட்டமைப்பு சார்பில் கேணல் தீபனின் பெயரைச் சொல்லி தேர்தலில் போட்டியிட்ட சிறிதரன் உள்நாட்டில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் தனது காம லீலைகளை மேற் கொண்டார்.

விதம் விதமான ஆபாச இறுவட்டுக்களை வாங்கி வந்து அலுவலகத்தில் போட்டுப் பார்பதை தனது வாடிக்கையாக கொண்டிருந்ததுடன், தன்னிடம் பிரச்சனைகள் என முறையிட வரும் பெண்களின் படங்களையும் தொலைபேசி இலக்கங்களையும் பெற்று அவர்களில் சிலரையும் பதம் பார்த்து வந்தார். இதை அறிந்தும் செஞ்சோற்றுக் கடன் தீர்த்த கண்ணன் போன்று பொன்னம்பலம் லட்சுமிகாந்தன் மௌனமாகவே இருந்து வந்தார்.

இதன் போது குருநகர்,பாசையூர் போன்ற பகுதிகளில் இருக்கும் மீனவர்களுக்கு முன்னாள் புலிகளின் உதவியுடன் டைனமேற் விற்பனையிலும் சிறிதரன் ஈடுபடத் தொடங்கினார். புலம் பெயர் நாடுகளில் இருந்து பெறும் பணத்திற்கு மேலதிகமாக இதன் மூலமும் பணம் சம்பாதிக்க தொடங்கிய சிறிதரன் தனது ஓட்டுமாட்டுகள் தெரிந்த லட்சுமிகாந்தனுக்கும், அமைப்பாளராக விளங்கிய வேலமாலிகிதனுக்கும் பெருமளவில் பணமும் வழங்கியிருந்தார்.

இவ்வாறு புழைப்பு நடத்திக் கொண்டு இருந்த போது இவரது வெடிமருந்து வியாபாரம் தெரியவந்ததும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் இவரது அலுவலகத்தை சோதனையிட்டனர் இதன் போது ஆபாச இறுவட்டுக்கள், போட்டோக்கள், பெண்களின் பெயர்கள் தொலைபேசி இலக்கங்கள் என்பனவும் வெடிமருந்துகளும் சிக்கின. இதனையடுத்து சிறிதரனின் பிரத்தியேகச் செயலாளரும், கூட்டமைப்பின் அமைப்பாளரும் கைது செய்யப்பட்டனர். சிறிதரனுக்காக அவரைக் காட்டிக் கொடுக்க விரும்பாமல் அவர் பார்த்த ஆபாச பட இறுவெட்டுக்களையும் ஆபாச படங்களையும் தாமே பார்த்ததாக ஒத்துக் கொண்டு வெடிமருந்து பழியையும் சுமந்து கடந்த 11 மாதங்களாக சிறையில் வாடினர்.

இவர்கள் சிறையில் இருந்த காலப்பகுதியில் ஒருதடவை மாத்திரமே சிறிதரன் இவர்களைச் சென்று பார்த்திருந்தார். தனக்காக சிறையில் இருந்தவர்களை போய் பார்க்காத இவரா தமிழ் மக்களுக்காக போராடப் போவது?

தமிழ் மக்களுக்காக ஆர்பாட்டம், உண்ணாவிரதம் என அறவழிப் போராட்டம் நடத்தப் போவதாக கூறும் சிறிதரனால் ஏன் தனக்காக தனது அலுவலகத்தில் வைத்து கைது செய்தவர்களை விடுவிக்க கோரி எந்தவொரு போராட்டமும் நடத்தப்படவில்லை? நடத்த முடியாது. ஏன் என்றால் ஆபாச படங்கள், ஆபாச சீடிகள், வெடிமருந்துகள் இருந்ததை ஆதாரத்துடன் பயங்காரவாதப் புலனாய்வுப் பிரிவினர் வெளிப்படுத்தி விடுவர் என்ற பயம். அவ்வாறு வெளிப்படுத்தினால் தனது காம லீலைகளும் வெடிமருந்து வியாபாரமும் வெளிவந்து விடும் என்ற பயம்.

அவருக்காக சிறை சென்றவர்கள் இன்று வெளியில் வந்து விட்டார்கள். வந்தவுடன் செய்தியாளர்கள் சிறிதரனை தொடர்பு கொண்டு தங்களின் பிரத்தியேக செயலாளரும் அமைப்பாளரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என கேட்டபோது, நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை மதிக்கிறேன் எனக் கூறி நழுவி விட்டார். யாரன் ஏற்பாடு செய்யுற கூட்டத்திலையே புகுந்து ஆர்பரிக்கும் சிறிதரன் செய்தியாளர் கேட்டபோது நழுவியமை அவர் தனது பிழை வெளியில் தெரியக் கூடாது என்பதில் தெளிவாகவுள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது.

தான் ஏதாவது சொன்னால் பதிலுக்கு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரும் ஏதாவது சொல்லுவினம். இதனால் தான் மாட்டிவிடுவேன் என்பதால் தான் நழுவிக் கொண்டார். இவர்கள் தான் மக்கள் தலைவர்களாம்.

3 comments :

Anonymous ,  November 7, 2013 at 11:38 PM  

This article are 100% correct. Sritharan had 14 brothers and sisters,where two are killed. Hes family are still in Kilinochchi Katchen Road aeria in Vattakkachchi. He have been to Norway nearly to collect hes funds from LTTE supporters and stayd with Sasi living in Norway,Mulliyavalai Maambalam Sivarajah LTTE HEAD and Naadu kadantha TAMIL EALAM candidate in Oslo + Elyarajah family in Oslo.

Sritharan is a criminell,where he had a smugler of ladys from Kilinochchi earia to Colombo lodges to missuse of them like rape cases,which has been in on utube publises.

30 years back, this family was very pure,where thay stold bread from Singhala bakary sals mans bysicles due to the Katchen road earia people. Sasi also from this earia.

Anonymous ,  November 8, 2013 at 6:53 AM  

The voters have to accept their blurred image.They are blushed to admit it.

Anonymous ,  November 8, 2013 at 11:11 PM  

இவருக்கு ஆண்மை இல்லையென்று முதல் மனைவி விவாகரத்து பெற்றுவிட்டார் இரடாவது மனைவிக்கு பிள்ளைகள் இல்லையாம் உண்மையா

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com