கிடைக்கும் சந்தர்ப்பங்களை இளைஞர்கள் தவறவிடக்கூடாது!
பொதுநலவாய இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டை மாகம் ருஹுனுபுர சர்வதேச மாநாட்டு மத்திய நிலையத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது
இளைஞர் மாநாட்டு ஆரம்பவிழாவில் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர் இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொறுமையுடனும் , தொலைநோக்குடனும் இளைஞர்கள் செயற்படுவார்கள் ஆயின் இலக்குகளை இலகுவாக வெற்றிகொள்ள முடியும் என சுட்டிக்காட்டினார்.
இளைஞர்களுக்காக இன்று செலவிடுப்படும் நிதி எதிர்காலத்திற்கனா முதலீடு என்பதால் அவர்களுக்கு அதிக சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்ததுடன் யுத்த சூழலால் நீண்டகாலமாக இலங்கையின் இளம் சந்ததியினர் பல்வேறு சந்தர்ப்பங்களை தவறவிட்டிருந்ததாகவும் ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஸ இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை இளைஞர் மாநாட்டில் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தனதுரையில், உலகம் துரித மாற்றத்தை அடைந்து வருவதாக சுட்டிக்காட்டியதுடன் இந்த மாற்றத்திற்கு அமைய இளைஞர்களும் மாற்றமடைய வேண்டியது அவசியம் என தெரிவித்தார்.
இன்னும் 2 வருடங்களுக்குள் மிலேனிய இலக்குகளை அடைவதற்கு ஏதுவாக பொதுநலவாய நாடுகள் செயற்பட வேண்டும் என்பதுடன் ஜனநாயகம் மற்றும் இன பல்வகைமைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் எனவும் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ்சர்மா தெரிவித்தார்.
இதேவேளை, பொதுநலவாய நாடுகளின் மக்கள் மன்ற மாநாடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் காலி கோட்டையில் இன்று மாலை ஆரம்பமாகவுள்ளது.
1 comments :
Very nice opening commonwealth youth forum 2013.
Congratulations for our Preisident Mr.Rajapakshe
Post a Comment