பெண்கள் பலருடன் உறவு வைத்துக் கொண்டதால் இன்று ஆண்மை இழந்து தவிக்கிறேன்! - கவலைப்படுகிறார் மைக் டைசன்!
இந்த பூமியில் யாருக்குமே அடங்காத- மகா மோசமான கெட்ட மனிதன் என்று ‘நல்ல பெயர்’ எடுத்தவர் முன்னாள் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் (47). குத்துச் சண்டை உலகின் ஜாம்பவானாக வலம்வந்த பலரை வீழ்த்தி உலக சாம்பியனாக புகழ்
ஏணியின் உச்சிக்கு சென்ற டைசன், 58 போட்டிகளில் பங்கேற்று அவற்றில் 50ல் வெற்றி பெற்றவர்.
ஆனால், சொந்த வாழ்க்கையில் 3 மனைவிகளை திருமணம் செய்து விவாகரத்தும் செய்த இவர் பல அழகிகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். போதாக்குறைக்கு, 1991ம் ஆண்டில் டிசிரி வாஷிங்டன் என்ற 18 வயது பெண்ணை கற்பழித்த வழக்கில் 6 ஆண்டு சிறை தண்டனை பெற்று 3 ஆண்டு தண்டனை காலம் தள்ளுபடி செய்யப்பட்டு 1995ம் ஆண்டு டைசன் விடுதலை ஆனார்.
1996 மற்றும் 1997ல் இவாண்டர் ஹோலி ஃபீல்ட்டிடம் உலக சாம்பியன் பட்டத்தை பறி கொடுத்த இவர், அதன் பின்னர் வரிசையாக தோல்விகளை சந்தித்து குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில், பிரபல ஆங்கில தொலைக் காட்சி சேனல் ஒன்றில் தனது மலரும் நினைவுகளை இம்மாதம் 16ம் தேதி பகிர்ந்துக் கொள்ளும் மைக் டைசனின் வாழ்க்கை வரலாறு விரைவில் புத்தகமாக வெளியாக உள்ளது.
தனது வாழ்வின் முக்கிய சம்பவங்களை இவரே பட்டியலிட்டு கூற லேர்ரி ஸ்லொமேன் என்பவர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
இன,மொழி,நிற பேதங்களை கடந்து பல பெண்களுடன் தான் நிகழ்த்திய காமக்களியாட்டங்களை மைக் டைசன் இந்த புத்தகத்தில் ‘நடந்தது நடந்தபடியே’ பதிவு செய்துள்ளார்.
கற்பழிப்பு வழக்கில் சிக்கி சிறையில் தண்டனை அனுபவித்த வேளையிலும், தனது பழக்கத்தை கைவிட முடியாமல் சிறையில் பணியாற்றிய போதைப் பழக்க தடுப்பு பெண் அலுவலரிடம் தொடர்ந்து இன்பம் அனுபவித்த சாகசத்தையும் விவரித்துள்ளார்.
இதைப் போன்ற அதீத பெண்களிடம் உடலுறவு வைத்திருந்ததால் சிறையில் இருந்த போது உடற்பயிற்சி செய்ய கூட சக்தியற்றவனாகி விட்டேன் என்பதை வெளிப்படையாகவும் வேதனையுடனும் மைக் டைசன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment